×
 

உதகையில் சொர்க்கம்..! பூத்துக்குலுங்கும் மலர்கள்..! ரோஜாக்களின் வண்ண ஜாலம்..!!

உதகை அரசு ரோஜா பூங்காவில் 21 வது ரோஜா கண்காட்சி துவங்கியது.

'பறவைகளின் சொர்க்கம்' என்ற கருப்பொருளில் 2 லட்சம் ரோஜாக்களை கொண்டு அமைக்கபட்டுள்ள பல்வேறு பறவை இனங்களின் வடிவங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை ஒட்டி நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியான 21வது ரோஜா கண்காட்சி இன்று உதகை ரோஜா பூங்காவில் துவங்கியது.

இக்கண்காட்சியினை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தொடங்கி வைத்து மலர் அலங்காரங்களை பார்வையிட்டார். 2 லட்சம் ரோஜா மலர்களை கொண்டு 'பறவைகளின் சொர்கம்' என்ற கருபொருளில் பவ்வேறு பறவையினங்களின் பிரமாண்ட வடிவங்கள் அமைக்கபட்டுள்ளன.

70,000 ரோஜாக்களை கொண்டு அமைக்கபட்டுள்ள ஜோடி அன்னபறவைகள் காண்போர் நெஞ்சை கவரும் விதத்தில் உள்ளது. அதேபோல் கழுகு,இருவாச்சி பறவை, புல் புல், பேரடைஸ் ஃபிளை கேட்சர், தூக்கணாங்குருவி, தேன் சிட்டு, மலபார் இருவாச்சி, நீலகிரி லாஃபிங் திரஷ் உள்ளிட்ட 14 வடிவங்கள் அமைக்கபட்டுள்ளது. மேலும் ஆங்ரி பேர்ட் உள்ளிட்ட கார்டூன் வடிவங்களும் காட்சிபடுத்தபட்டுள்ளன.

இதையும் படிங்க: தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சம் கடன் - நயினார் நாகேந்திரன் விளாசல்!

இதை தவிர பூங்கா முழுவதும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க 4,310 ரகங்களில் 33,000 செடிகளில் பல வண்ண ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன.இந்த கண்காட்சியினை காலை முதலே ஏராளளான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு 3 நாட்கள் ரோஜா கண்காட்சி நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டூ 5 நாட்கள் நடைபெறுகிறது. எனவே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

இதையும் படிங்க: ஊட்டிக்கு ஹெலிகாப்டரில் வந்த குஷ்பு..!! அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் பறக்கும் படை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share