×
 

தலைமைப் பண்பு இல்லைன்னா தோல்வி நிச்சயம்... எடப்பாடியை வசைப்பாடிய ஓபிஎஸ்!

தலைமை பண்பு இல்லாதவருக்கு தோல்வி நிச்சயம் என எடப்பாடி பழனிச்சாமியை ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு வந்தார். கீழடி எல்லையில் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

செல்லூர் ராஜு, எடப்பாடிக்கு பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றார். இதைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எடப்பாடிக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். இந்தச் சூழலில், எடப்பாடி பழனிசாமி தனது காரில் பயணிக்கத் தயாரானபோது, செல்லூர் ராஜு அவரது காரின் பின்புறக் கதவைத் திறந்து உள்ளே ஏற முயன்றார். ஆனால், முன் இருக்கையில் அமர்ந்திருந்த எடப்பாடி, வேண்டாம், வேண்டாம், பின்னால் வரும் வண்டியில் வாங்க என்று கூறி, செல்லூர் ராஜுவை காரில் ஏறவிடாமல் தடுத்தார்.

மற்றொரு சம்பவம், மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவிக்க முற்பட்டபோது அதைத் தெரிவிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த இரு சம்பவங்களும் காட்சிகளும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவியதாகவும், செல்லூர் ராஜூவுக்கும், தம்பி துரைக்கும் ஏற்பட்டது அவமரியாதை மற்றும் இழுக்கு என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “அவரு வர்ல, உங்களுக்கு எதுவுமே இல்ல” ... டிடிவி-க்கு ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவு போட்ட பாஜக தலைமை... இபிஎஸுக்கு எதிராக அசைன்மெண்ட்...!

செயலின் வலிமை, தன் வலிமை, பகைவனின் வலிமை, துணை செய்பவர்களின் வலிமை இவற்றை ஆராய்ந்து செயலைச் செய்ய வேண்டும் என திருவள்ளுவர் கூறிய இருப்பதாகவும், இதற்கு மாறான எந்த செயலும் படுதோல் தான் முடியும் என்றும் தலைமை கொண்டு இல்லாதவருக்கு தோல்வி நிச்சயம் எனவும் குறிப்பிட்டார். 

இதையும் படிங்க: இறங்கி வந்த பாஜக... STRICT ஆக NO சொன்ன ஓபிஎஸ்! காரணம் என்ன சொன்னாரு தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share