×
 

நண்பா...இன்னும் பல உயரம் தேடி வரும்! ஆஸ்கர் குழு அழைப்பை பெற்ற கமல்ஹாசனுக்கு முதல்வர் அன்புமழை

ஆஸ்கர் விருது குழுவில் இணைய அழைப்பு பெற்றுள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) 2025ஆம் ஆண்டு உறுப்பினராக இணைய நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பு, அவரது இந்திய மற்றும் உலக சினிமாவில் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் உட்பட 534 கலைஞர்கள் மற்றும் திரைப்படத் துறை வல்லுநர்கள் இந்த ஆண்டு உறுப்பினராக இணைய அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு நடிகர் ஆயுஷ்மான் குரானா, இயக்குநர் பாயல் கபாடியா, ஆவணப்பட இயக்குநர் ஸ்மிருதி முந்த்ரா, உடைகள் வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, ஒளிப்பதிவாளர் ரனபிர் தாஸ் ஆகியோரும் அடங்குவர். கமல்ஹாசன் இந்த அழைப்பை ஏற்றால், ஆஸ்கர் விருதுகளுக்கான வாக்கெடுப்பில் பங்கேற்கும் உரிமை பெறுவார். இவர் இந்தியாவில் இருந்து இந்த அழைப்பைப் பெறும் இரண்டாவது நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முதல் நடிகர் சூர்யா. கமல்ஹாசனின் ஏழு படங்கள் முன்பு ஆஸ்கர் விருதுகளுக்காக இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ரூ.197 கோடியில் புதிய மருத்துவமனை.. அரசவைக்கும் கட்டமைப்பு! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு!

ஆனால் இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்த நிலையில்,இந்த அழைப்பு இந்திய சினிமாவின் உலகளாவிய அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும், இது இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் தருணமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக் குழுவில் இணையும் அழைப்பினை பெற்றுள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் 

உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர், கலைஞானி கமல்ஹாசனுக்கு தன்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். 

மொழி, தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதான அங்கீகாரமே இது என்றும் இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தி உள்ளார்.

இதையும் படிங்க: வேலூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ.. வழி நெடுகிலும் மக்கள் பூக்களை தூவி உற்சாகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share