பழனி நில மோசடியில் திடுக் ட்விஸ்ட்... சீனுக்கு வந்த புது கேரக்டர்... சல்லடை போட்டு தேடும் சிபிசிஐடி...!
பழனி ரூ.100 கோடி மட நில மோசடி வழக்கு தொடர்பாக 4 பேரை கைது செய்த சிபிசிஐடி போலீஸ்சார் மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
பழனி அடிவாரம் சன்னதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான சுமார் 100 கோடி மதிப்பிலான நிலம் நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் இரண்டு கோடிக்கு மோசடி பதிவு செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ் வழக்கு தொடர்பாக பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த புகாரியின் பேரில் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய மடத்துக்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழனி புதூரச் சேர்ந்த சேதுபதி என நான்கு பேர் மீது கூட்டுச்சதி மோசடி உள்ளிட்டு ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 15ம் தேதி சிபி சிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது இதனை எடுத்து கடந்த 15 தினங்களுக்கு மேலாக சி பி சி ஐ டி எஸ் பி சாஜிதா டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் திண்டுக்கல் மற்றும் பழனியில் தீவிர விசாரணையில் மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் ரூ.2 கோடிக்கு பதிவு.! பின்னணியில் சென்னை உயரதிகாரிகள்? பரபரப்பு விசாரணை!
இவ் வழக்கு தொடர்பாக கோயில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து ஓய்வு பெற்ற தாசில்தார் மாரியப்பன் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி சின்னச்சாமி அறநிலைத்துறை ஆய்வாளர் சிவனேசன் உட்பட 15க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால ஜாமின் வழங்கியது.
மேலும் 27 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கடந்த 2 நாட்களாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார் அவரிடம் எஸ் பி சாஜிதா டி எஸ் பி அஜய் தங்கம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனி தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான நில மோசடி வழக்கு தொடர்பாக, 1880-ஆம் ஆண்டின் நில உரிமையாளர் எனக் கூறப்படும் குப்புசாமி மணியகாரரின் ஒரிஜினல் வாரிசுதாரர்கள் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று 28.07.26 மாலை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக, குப்புசாமி மணியகாரரின் வாரிசுதாரர்களான சுந்தரி, அவரது மகன் விஷ்ணு சுதர்சன் மற்றும் மகள் ஜெயலட்சுமி ஆகியோர் சிபிசிஐடி போலீசாரின் உத்தரவின் பேரில் ஆஜராகினர். அப்போது, தங்களது வசமிருந்த நிலம் தொடர்பான அசல் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை அவர்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி எஸ்பி ஷாஜிதா அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதனிடையே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்த
விழுப்புரம் மாவட்டம், சாலாமேடு, காமராஜர் நகர் 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த தண்டபாணி அய்யா என்பவரின் மகன் முருகதாஸ் (56)
நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, பப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் வெள்ளைத்துரை (60), பழனி புதூரையைச் சேர்ந்த சேதுபதி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களுக்கு துணையாக இருந்து மோசடிக்கு உடந்தையாக இருந்த வழக்கறிஞர் பழனி கவுண்டன்குளம் பகுதியைச் சேர்ந்த அன்வர்தீன் (65) ஆகிய 4நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது BNS பிரிவுகள் 318(4), 336(3), 340(2), 49 மற்றும் 61(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் இது வழக்கு தொடர்பாக ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த நில புரோக்கரும் பத்திர எழுத்துருமான ஜெயபிரகாஷ் என்பவரை போலிசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பழனியில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் களமிறங்கிய சிபிசிஐடி... 8 மணி நேர சோதனையில் நடந்தது என்ன?