×
 
☰

பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

போலீசாரின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று  மாலை மீண்டும் வழக்கறிஞர் சிவக்குமார் இளநிலை உதவியாளர் சிவசங்கரி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். 

பழனி 100 கோடி நில மோசடி வழக்கில்  பத்திரப்பதிவு அலுவலக இளநிலை உதவியாளர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் சி பி சி ஐ டி போலீஸ் காவல் முடிந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர். வருகின்ற 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியாக தனியாருக்கு ரூ 2 கோடிக்கு  பத்திரப்பதிவு செய்யப்பட்டது.இந்த  மேசடி தொடர்பாக பழனி அடிவார போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இந்நிலையில் இந்த விவகாரம் பூதாகாரமானது இதனை அடுத்து தமிழக அரசு கடந்த ஜூலை 15ஆம் தேதி சிபிசிஐடி மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது.இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் திண்டுக்கல் மற்றும் பழனியில் முகாமிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

இதையும் படிங்க: பழனி அரசு பள்ளி குடிநீர் தொட்டி விவகாரம்: திண்டுக்கல் எஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை!

மேலும் இந்த வழக்கு தொடர்பாக 11பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் மேலும் இது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாஷ், நிலத்தை மோசடியாக எழுதி வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழனி ஆயக்குடியை சேர்ந்த சேதுபதி, விழுப்புரத்தை சேர்ந்த அறக்கட்டளை வாரிசுதாரர் ஆசிரியர் முருகதாஸ், பழனி வழக்கறிஞர் அன்வருதீன், ஒட்டன்சத்திரம் இடைத்தரகர் மற்றும் பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 6 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகஸ்ட் 7ஆம் தேதி மதுரை மத்திய சிறைச்சாலையில் உயிரிழந்தார். ஜெயப்பிரகாஷிடம்  நடத்தப்பட்ட விசாரணை  அவரது தோட்டத்து வீட்டில் இருந்து 2 கணினி தரவுகள்,  மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.அதன் அடிப்படையில் ஜெய பிரகாஷை போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

 விசாரணையில் போலி பத்திரப்பதிவுக்கு பழநி சார்பதிவாளர் அலுவலக இளநிலை உதவியாளர் சிவசங்கரி, ஒட்டன்சத்திரம் விருப்பாட்சி வழக்கறிஞர் சிவக்குமார் ஆகியோர் உதவி செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக கடந்த 2  மாதத்திற்கு முன்பு சிவசங்கரி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, போலி பத்திரப்பதிவுக்கு உடந்தையாக செயல்பட்ட சிவசங்கரி, போலி பத்திரம் தயாரித்து அதில் கையெழுத்திட்டு கொடுத்த சிவக்குமார் இருவரையும் அக்.,7ல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார், திண்டுக்கல் முதலாம் ஜூடிசியல்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மேஜிஸ்திரேட் பாக்கியராஜ் கடந்த 13.10.26 முதல் 16ம் தேதியான  இன்று மாலை சிபிசிஐடி போலீசார் காவலில் விசாரிக்க உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இதனை அடுத்து இரண்டு பேரையும் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று  மாலை மீண்டும் வழக்கறிஞர் சிவக்குமார் இளநிலை உதவியாளர் சிவசங்கரி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். 

இதனை அடுத்து இருவரையும் மெஜிஸ்ட்ரேட் பாக்யராஜ் வருகின்ற 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து இரண்டு பேரும் மதுரை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 

இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய பழனி பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்... சிறுவர்கள் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share