×
 

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் காவிரி உரிமை பறிபோகும்..! பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை..!!

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் காவிரி உரிமை பறிபோகும் என பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காவிரி உரிமை பறிபோகும் என்றும் நெல் கொள்முதல் கைவிடப்படும் என்றும் பிஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்து உள்ளார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் முன்னணி தலைவர்கள் பங்கேற்கும் சேலம் மண்டல ஆலோசனைக் கூட்டம் மூத்த தலைவர் கே எம் ராம கவுண்டர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற மாநில ஒருங்கிணைப்பாளர் 

பி ஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, திமுக ஐந்து ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகள் உரிமைகள் பறிபோய் விட்டது. உரிமைக்காக குரல் கொடுத்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்ட கொடுமை அரங்கேறுகிறது. விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைப்பதையே தனது கொள்கையாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் செயல்பட்டார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் விவசாயிகள் கைது செய்யப்படவில்லை என்று கூறினார். 

மிக மோசமான அளவில் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான வகையில் திமுக அரசு செயல்பட்டது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை மக்கள் விவசாயிகள் விரும்பவில்லை. ஆனால் அதானி விரும்புகிறார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். கார்ப்பரேட் மோகம் கொண்ட திமுக ஆட்சி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 யை கொண்டு வந்து விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலங்களை கையகப்படுத்துவதும், நீர்நிலைகளை அபகரித்துக் கொள்வதற்கும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சட்டமாக கொண்டுவரப்பட்டதால் அதானி விரும்புவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

இதையும் படிங்க: நெருங்கியாச்சு தேர்தல்..! திமுக கூட்டணிக்கு இயற்கை தாயகம் சங்கம் ஆதரவு..!!

காவிரி உரிமை பறிபோகும் பேராபத்து ஏற்பட்டுள்ளது என்றும் முல்லைப் பெரியாறு உரிமை பறிபோகும் எனவும் தெரிவித்துள்ளார்.  திமுக மீண்டும் ஆட்சிக்கு வருமேயானால் நெல் கொள்முதல் கைவிடப்படும், ஊக்கத்தொகை வழங்குவது நிறுத்தப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: உங்க விளக்கமே வினோதமா இருக்கு..! தொகுதி மறு வரையறை குறித்து ஆ.ராசா விளாசல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share