பரந்தூரில் குறைகடத்தி பூங்கா அமைக்க திட்டம்... முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு நடவடிக்கை.!!
பரந்தூரில் குறை கடத்தி பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே உள்ள மதுரமங்கலத்தில் குறைகடத்தி மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முழு வீச்சில் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இது பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்ட பின்னர் அப்பகுதியில் தொழில்துறை வளர்ச்சிக்கான புதிய திட்டமாக உருவெடுத்துள்ளது.
முந்தைய அரசு காலத்தில் விமான நிலையத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போதைய அரசு அந்தத் திட்டத்தைக் கைவிட்டு, அருகாமையில் உள்ள மதுரமங்கலத்தில் நவீன தொழில் பூங்காவை உருவாக்கத் தீர்மானித்துள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவித்த இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.175 கோடி. சிப்காட் நிறுவனம் மூலம் இந்த குறைகடத்தி மற்றும் மின்னணு உற்பத்தி பூங்கா அமைக்கப்படவுள்ளது. உலகத் தரத்திலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளுடன் இந்தப் பூங்கா உருவாக்கப்படும் என்றும், இதன் மூலம் குறைகடத்தி துறையில் பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்க்க முடியும் என்றும் அரசு நம்புகிறது.
குறிப்பாக ரூ.2,000 கோடி வரை முதலீடுகளை ஈர்க்கவும், நேரடி மற்றும் மறைமுகமாக சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் பூங்காவுக்கான நில கையகப்படுத்தும் பணிகளுக்கு அரசு ஏற்கனவே தயாராகிவிட்டது. தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர் வெளியிட்ட அறிவிப்பின்படி, தொழில்துறை பயன்பாட்டிற்காக சுமார் 8.3820 எக்டர் நிலம் தேவைப்படுகிறது. கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் புன்செய் வகையைச் சேர்ந்தவை. அவற்றில் வேம்பு மற்றும் தென்னை மரங்கள் உள்ளன. நிலத் திட்டங்கள் சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் சிறப்பு தாசில்தார் அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை vs லாட்டரி மருமகன்..! களேபரமான சட்டமன்றம்... மாறி மாறி கருத்து மோதல்..!
பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு முன்பு பல கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டபோது உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்த நிலையில், இப்போது அருகாமையில் உள்ள மதுரமங்கலத்தில் புதிய தொழில் பூங்காவுக்கான நில கையகப்படுத்தல் தொடங்கியுள்ளது. இது விவசாய நிலங்களைப் பாதிக்காமல், வறண்ட நிலங்களைப் பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: பரந்தூரை கைவிடுவது மாற்றமல்ல... பேரிடி..! பின்னடைவு..! தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை..!!