×
 

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்..! பாதகம் வராது என நம்புவதாக அறிவிப்பு..!

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்கள் முக்கியமாக கலை, இசை, தையல், உடற்கல்வி போன்ற சிறப்புப் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களாவர். தமிழகத்தில் சுமார் 12,000க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களது போராட்டத்தின் மையக் கோரிக்கை பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு.

இந்தப் போராட்டத்தின் பின்னணி 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி. இதை நிறைவேற்ற வில்லை எனக் கூறி ஆசிரியர்கள் போராடி வந்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இருப்பினும் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் தங்களுக்கு ஊதிய உயர்வு தேவை இல்லை பணி நிரந்தரம் தான் தேவை என்றும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

இன்று சட்டப்பேரவையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆசிரியர் தகுதி தேர்வுகளில் பணி நேர அடிப்படையில் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். முதல்வர் அறிவிப்பால் ஆசிரியர்கள் சமாதானம் ஆகி போராட்டங்களை கைவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த பிறகும் கூட பகுதி நேர ஆசிரியர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க: ஆசிரியர் கண்ணன் உடலை பார்க்கணும்... போராடிய பகுதிநேர ஆசிரியர்கள் அதிரடி கைது..!

நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் போராடிய ஆசிரியர்களை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில், பணி நிரந்தரம் கோரி கடந்த 17 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நீர ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி அளித்ததால் பாதகம் இல்லாத அறிவிப்பு வரும் என்று நம்பி போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்துள்ளனர். மனநிறைவாக இல்லாதபோதும் ஆசிரியர்களின் பொருளாதார மற்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஊதிய உயர்வு வேண்டாம்... பணி நிரந்தரம்தான் வேண்டும்..! பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share