ஆசிரியர் கண்ணன் உடலை பார்க்கணும்... போராடிய பகுதிநேர ஆசிரியர்கள் அதிரடி கைது..!
டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றக்கோரி போராடி வருகின்றனர். வாக்குறுதி எண் 181 ஐ நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இவர்கள் முக்கியமாக கலை, இசை, தையல், உடற்கல்வி போன்ற சிறப்புப் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களாவர். தமிழகத்தில் சுமார் 12,000க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்களது போராட்டத்தின் மையக் கோரிக்கை பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய பகுதிநேர் ஆசிரியர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி 2500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதனை ஏற்காத ஆசிரியர்கள் பணி நிரந்தரம்தான் தேவை என்று தொடர்ந்து டிபிஐ வளாகத்தில் போராடி வருகின்றனர். இதற்கிடையில் மன உளைச்சலில் பகுதி நேர ஆசிரியர் கண்ணன் என்ற விஷம் குடித்த நிலையில் இன்று சிகிச்சை பலனென்று உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்ததும் போராட்ட காலத்தில் இருந்த ஆசிரியர்கள் இரண்டு நிமிடம் ஆசிரியர் கண்ணனுக்கு மௌன அஞ்சலி செலுத்தியதுடன் கதறி அழுதனர். ஆசிரியர் கண்ணன் உடலை காண்பதற்கு தங்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறி போராடினர்.
இதையும் படிங்க: ஊதிய உயர்வு வேண்டாம்... பணி நிரந்தரம்தான் வேண்டும்..! பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டம்..!
பகுதி நேர ஆசிரியர் கண்ணனின் ஒரே மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் ஆசிரியர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற தன் உயிரை கொடுத்தவர் என்றும் சக ஆசிரியர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். கண்ணன் உடலை பார்க்க வேண்டும் என்று கூறி போராடிய நிலையில் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பகுதி நேர ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பணி நிரந்தரம் கேட்டுப் போராடிய பகுதி நேர ஆசிரியர் மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: போராட்டத்தில் குதித்த பகுதிநேர ஆசிரியர்கள்... DPI வளாகத்தில் பரபரப்பு..!