×
 

“கிரேட் சார்... உங்க மனசு யாருக்கும் வராது” - பட்டுக்கோட்டை தாசில்தாருக்கு குவியும் பாராட்டுக்கள்...!

குரூப் 4 தேர்வர்கள் சரியான நேரத்திற்கு தேர்வு எழுத சென்றுவருவதற்கு ஏதுவாக 10க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளை ஏற்பாடு செய்து கொடுத்த தாசில்தார்

குருப் 4 தேர்வை எழுதச் செல்லும் தேர்வர்கள் பட்டுக்கோட்டை பகுதியில் பேருந்துகள் தொடர்ச்சியாக இருக்காது என்பதை உணர்ந்த தாசில்தார், தேர்வர்கள் சரியான நேரத்திற்கு தேர்வு எழுத சென்றுவருவதற்கு ஏதுவாக 10க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளை ஏற்பாடு செய்து அனைவரும் ஹால் டிக்கெட் எடுத்துக் கொண்டீர்களா? எனக்கேட்டு பெஸ்ட் ஆப் லக் சொல்லி வழியனுப்பி வைத்தார் - தாசில்தாரின் மனித நேயத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 பதவிக்கு இன்று எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. 3,935 பணியிடங்களுக்கு 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவிக்கு தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்காவில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருச்சிற்றம்பலம், பள்ளத்தூர், கரம்பயம், தம்பிக்கோட்டை மேலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 23 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு மையங்களில் சுமார் 6,000 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேற்கண்ட தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் சரியான நேரத்திற்கு சென்று வருவதற்கு பேருந்துகள் தொடர்ச்சியாக இருக்காது என்பதை உணர்ந்த பட்டுக்கோட்டை தாசில்தார் தர்மேந்திரா, ஒரு சிறப்பு முயற்சி எடுத்து தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தார்.

இதையும் படிங்க: திருமலா பால் மேலாளர் வழக்கு... என்னை மீறி விசாரணை நடந்து இருக்கு! சென்னை கமிஷனர் அருண் பரபர பேட்டி

அதன்படி இன்று காலை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து அதிராம்பட்டினம், திருச்சிற்றம்பலம், பள்ளத்தூர், கரம்பயம், தம்பிக்கோட்டை மேலக்காடு உள்ளிட்ட தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு 10க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளில் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3,000 தேர்வர்கள் தேர்வு எழுத புறப்பட்டுச் சென்றனர்.

இன்று காலை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திற்குவந்த தாசில்தார் தர்மேந்திரா, பேருந்துகளில் ஏறி தேர்வர்களிடம் அனைவரும் ஹால் டிக்கெட் எடுத்துக் கொண்டீர்களா? என்று கேட்டதுடன், அனைவருக்கும் பெஸ்ட் ஆப் லக் என்று சொல்லி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். தேர்வர்கள் தேர்வை எழுதி முடித்துவிட்டு தேர்வு எழுதிய மையத்திலிருந்து மீண்டும் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் அதே பேருந்துகளில் கொண்டு வந்து இறக்கிவிடப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டுக்கோட்டை தாசில்தார் தர்மேந்திராவின் இந்த மனித நேய செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

இதையும் படிங்க: எங்களுக்கு என்ன பயம்? ஒட்டுக் கேட்பு கருவி உண்மைனா வெச்சது யாருன்னு கண்டுபிடிங்க... அன்புமணி தரப்பு வலியுறுத்தல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share