ஆளுநர் மாளிகையில் ஏன் நிரூபிக்கணும்..? சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை சுட்டிக்காட்டிய ப.சிதம்பரம்..!
பெரும்பான்மையை ஏன் ஆளுநர் மாளிகையில் நிரூபிக்க வேண்டும் என ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இது தமிழக அரசியலில் ஏகபோகமாக இருந்த திராவிடக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளிய ஒரு பெரிய மாற்றம்.
ஆனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் தவெக 10 இடங்கள் பின்தங்கியிருப்பது, ஆட்சி அமைப்பு குறித்த சிக்கல்களை உருவாக்கியது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 2 முறை விஜய் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என கூறப்பட்டது.
விஜய்க்கு ஆதரவாக பல்வேறு கட்சிகள் குரல்கொடுத்தன. இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் எந்த அரசியல் கூட்டணிக்கும் அல்லது அரசியல் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், ஆளுநரின் கடமை என்ன என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினார். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதன்மைக் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றும் இது தான் அரசியல் விதி. இது தான் நாடாளுமன்ற மரபு எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “இணையப்போகிறார்கள்...” - தமிழகவே எதிர்பார்த்த நல்ல செய்தி வெளியானது... முக்கிய முடிவெடுத்த கட்சிகள்...!
அந்தக் கட்சியின் தலைவர் தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்று நிரூப்பிக்க வேண்டிய களம் சட்டமன்றம். ஆளுநர் மாளிகை அல்ல என்றும் இது தான் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு 1994 (3) SCC 1 என்று கூறினார். இந்த விதியை விளக்கி வலியுறுத்திய தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை நான் பாராட்டுகிறேன் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!