ராயல் சல்யூட்... அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் குழந்தை... ஷரண்யா அறிக்கு குவியும் பாராட்டுகள்...!
தனது 2 வயது குழந்தையை அரசு அங்கன் வாடி மையத்தில் சேர்த்துள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் செயல் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
அரசு அங்கன்வாடி மையங்களின் முக்கியத்துவத்தை அறிந்து பொதுமக்கள் தங்களது குழந்தை
களைச் அங்கன் வாடிமையங்களில் சேர்ப்பதை ஊக்கப்படுத்திடும் வகையில் தனது 2 வயது குழந்தையை அரசு அங்கன் வாடி மையத்தில் சேர்த்துள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் செயல் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
தனியார் கல்வி நிறுவனங்கள் மீது ஏற்பட்டுள்ள மோகத்தினால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுபள்ளிகள் மற்றும் அரசின் அங்கன்வாடி மையங்களில் சேர்ப்பதை இழிவாக கருதி வரும் நிலையில், அரசு அங்கன்வாடி மையங்களின் தரம் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அங்கன்வாடி மையங்கள் மீது பெற்றோர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திடும் நோக்கிலும் நூதன முயற்சியை மேற்கொண்டுள்ளார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சரண்யா அறி.
கடந்த வாரம் அங்கன்வாடி மையங்களை ஆய்வு சென்ற மாவட்ட ஆட்சியர் அங்கன் வாடி மையங்களின் சிறப்பான கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை பார்த்து தனது குழந்தையையும் அங்கன் வாடியில் சேர்க்கபோவதாக தெரிவித்திருந்தார். தற்போது அவர் தனது 2 வயது மகனான ஆத்விக் என்ற ஆண் குழந்தையை ஆட்சியர் குடியிருப்பிற்கு அருகே விளாமுத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு அங்கன்வாடி மையத்தில் கொண்டு சேர்த்துள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் ஆன பின் முதல் முறை கரூர் விசிட்... தூள் கிளப்ப காத்திருக்கும் விஜய்... இன்றைய மாஸ்டர் பிளான் என்ன?
எளிய மாணவர்கள் அணிந்து வரும் சீருடையை அணிந்து தனது குழந்தை மையத்தில் விளையாடுவதை கண்டு மகிழ்ந்த ஆட்சியர், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தனியார் பள்ளியில் பயில்வதைகௌரவமாக நினைக்காமல் அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
விளையாட்டோடு கூடிய ஆரம்பக் கல்வி, ஊட்டச்சத்தான உணவு, பாதுகாப்பான சூழல் என அனைத்து வசதிகளும் நிறைந்த அரசு அங்கன்வாடி மையங்களின் முக்கியத்துவத்தைப் பொதுமக்கள் அனைவரும் முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும். அரசு மையங்களில் வழங்கப்படும் இத்தகைய சேவைகளைத் தங்களது குழந்தைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அரசு அங்கன்வாடி மையங்களில் சேர்க்க பெருமளவில் முன்வர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றோர்களை கேட்டுக்கொண்டுள்ளார்
இதையும் படிங்க: தவெக எம்.எல்.ஏ.விடம் பேர விவகாரத்தில் அதிரடி திருப்பம்... மேலும் இருவர் கைது... ரூ.54 லட்சம் பறிமுதல்...!