×
 

#BREAKING: பிரபல ரவுடி வெள்ளைக் காளி மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு..! நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது துணிகரம்..!

பிரபல ரவுடி வெள்ளைக் காளியை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடியை குறிவைத்து நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட துணிகரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவுடி வெள்ளை காளி என்பவர் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ரவுடி வெள்ளை காளி மீது ஒன்பது கொலை வழக்குகள் எட்டு கொலை முயற்சி வழக்குகள் 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை டோல்கேட் அருகே ரவுடி வெள்ளை காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றபோது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது.

போலீஸ் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட துணிகரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் வாகனத்தில் இருந்த போலீசாரும் காயம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீசார் அழைத்துச் சென்ற போது சினிமா பாணியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கிய ரவுடி கொலை சம்பவம்..! 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை... கூடுதல் ஆணையர் விளக்கம்..!

நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த போலீசார் மற்றும் ரவுடி ஆகியோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த துணிகரச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தகவல் அறிந்ததும் பெரம்பலூர் மாவட்ட எஸ் பி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உயர்ரக பாதுகாப்பையும் மீறி நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது ரவுடியை கொலை செய்யவா அல்லது தப்பிக்க வைக்கவா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது..

இதையும் படிங்க: ஊழலில் மூழ்கிய தமிழகம்..! அடுக்கு மொழி முதல்வர்..! பிரச்சனைகளை லிஸ்ட் போட்ட TTV..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share