×
 

தமிழகத்தை உலுக்கிய ரவுடி கொலை சம்பவம்..! 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை... கூடுதல் ஆணையர் விளக்கம்..!

ரவுடி ஆதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கூடுதல் ஆணையர் விளக்கம் அளித்தார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதி என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆதி என்ற ரவுடி பிரசவத்திற்காக மருத்துவமனையின் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை பார்ப்பதற்காக சென்னை கீழ்பாக்கம் அரசினர் மருத்துவமனைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

அவர் உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்த சமயத்தில், திடீரென ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் கொண்ட ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் தமிழக முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கூடுதல் ஆணையர் நரேந்திர நாயர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூடுதல் ஆணையர் நரேந்திர நாயர், பணியில் இருந்த காவல்துறையினர் மீது நிச்சயமாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்த கொலை சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்துள்ளதாக கூறினார்.

இதையும் படிங்க: கொலைக்களமாகும் அரசு நிறுவனங்கள்... கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்..! வலுக்கும் கண்டனம்..!

மேலும், கொலை தொடர்பாக மேலும் 4 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். வழக்கமாக பத்து காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்றும் தெரிவித்தார். கொலைக்கான காரணம், குற்றவாளிகள் யார், என்பது தொடர்பாக விசாரிக்க ஒன்பது தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகள் யார் யார் என்பது குறித்து கண்டறிந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வீதிக்கு வீதி கொலை... இந்த விடியா ஆட்சி வேண்டுமா?... விளாசிய அதிமுக..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share