பெரியார் நூலகத்தில் கண் திருஷ்டி படம்! இதுதான் சமூக நீதியா? பூந்து விளாசிய நெட்டிசன்ஸ்
பெரியார் நூலகத்தில் கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
கோவையில் காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே மத்திய சிறைச்சாலைக்கு சொந்தமான 6.98 ஏக்கர் நிலத்தில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023 நவம்பரில் அடிக்கல் நாட்டினார். ரூ.300 கோடி மதிப்பீட்டில், 1,98,000 சதுர அடி பரப்பளவில் 7 தளங்களுடன் இந்த நூலகம் அமையவுள்ளது. இதில் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.245 கோடி, புத்தகங்கள் மற்றும் மின் புத்தகங்களுக்கு ரூ.50 கோடி, டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது 30% கட்டுமானப் பணிகள் முடிந்துள்ளன, மேலும் பருவமழையை கருத்தில் கொண்டு பணிகளை விரைவாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரியார் நூலாக கட்டிடத்தில் பெரிய கண் திருஷ்டி படம் மாட்டப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. மூடநம்பிக்கைகளை எதிர்த்து தனது வாழ்நாள் இறுதி வரை போராடியவர் பெரியார். அவரின் பெயரில் கட்டப்பட்டு வரும் நூலகத்தில் மூட நம்பிக்கையின் சின்னமாக இருக்கும் கண் திருஷ்டி படம் அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது பெரும் பேசப் பொருளாக மாறிய நிலையில் கட்டுமான ஒப்பந்ததாரர் அவருக்கு இருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் கண்திருஷ்டி படத்தை வைத்திருக்கலாம் என்றும் தன்னைப் பொறுத்தவரையிலும் அரசை பொருத்தவரையிலும் இப்படி எந்த ஒப்பந்தத்திலும் குறிப்பிடவில்லை என்றும் அமைச்சர் எ. வ. வேலு கூறினார்.
இதையும் படிங்க: அட்ரா சக்க! பசுமை வீடு, மா தொழிற்சாலை....மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட இபிஎஸ்!
இருப்பிடம் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், இதுதான் உங்கள் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றும் அரசா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் அரசுக்கு தெரியாமல் பல துறைகளில் மூடநம்பிக்கைகளை ஊடுருவச் செய்யும் நபர்கள் இருப்பதாகவும் அவர்களை களையெடுக்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்
இதையும் படிங்க: மக்கள் கிட்ட கனிவா.. கவனமா நடந்துக்கோங்க! காவலர் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு முதல்வர் அதிமுக்கிய அறிவுறுத்தல்..!