×
 

சொத்துக்குவிப்பு! சிக்கலில் அமைச்சர் ஐ.பெரியசாமி... உச்சநீதிமன்றம் கொடுத்த ஷாக்..!

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ. பெரியசாமி விடுவிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

2006 முதல் 2011 வரை தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி, வருமானத்திற்கு மீறிய வகையில் சுமார் 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, 2012ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, அவரது மனைவி மற்றும் மகன்களையும் உள்ளடக்கியது.

ஏனெனில் அவர்களும் சொத்து குவிப்பில் தொடர்புடையவர்களாக கருதப்பட்டனர். திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, 2018இல், குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, ஐ. பெரியசாமி உள்ளிட்ட நான்கு பேரையும் விடுவித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

திண்டுக்கல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, லஞ்ச ஒழிப்பு துறையினர் 2018இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீடு நீதிபதி பி. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்பு துறையினர், முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையை அடிப்படையாகக் கொண்டு, குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக வாதிட்டனர்.

இதையும் படிங்க: மனிதாபிமானமே இல்லையா உங்களுக்கு? விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆதங்கம்...

மறுபுறம், ஐ. பெரியசாமி தரப்பு, குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் சொத்து மதிப்பீடு முறையாக நடைபெறவில்லை என வாதிட்டது. 2025 ஏப்ரல் 28 அன்று, நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு வழங்கினார். அவர், திண்டுக்கல் நீதிமன்றத்தின் விடுவிப்பு உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார். 

இந்த மறுவிசாரணை உத்தரவை எதிர்த்து, ஐ. பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இருப்பினும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு முக்கியமான வளர்ச்சி ஏற்பட்டது. 2025 ஆகஸ்ட் மாதத்தில், ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றொரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பில், லஞ்ச ஒழிப்பு துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, ஐ. பெரியசாமி, அவரது மனைவி பி. சுசீலா, மற்றும் மகன்கள் பி. செந்தில் குமார் மற்றும் பி. பிரபு ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டது. 

இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ பெரியசாமி விடுவிப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஐ. பெரியசாமிக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி திபான்கர் தத்தா, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு லஞ்ச ஒழிப்புத்துறை போல சார் பதிலளிக்கவும் நோட்டீஸ் அளிக்க உத்தரவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: தெரு நாய்கள் பாவம் இல்லையா? சென்னையில் விலங்குகள் நல ஆர்வலர்கள் பேரணி…

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share