×
 

நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்... திமுக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...!

இராமநாதபுரம் அருகே திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் பாட்டில் வீச்சு 

இராமநாதபுரம் அடுத்த வழுதூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 5ந்தேதி  நடைபெற்ற முளைப்பாரி திருவிழாவில் இன்னிசை நிகழ்ச்சியில் ஜாதி ரீதியான பாடல் பாட கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக
திமுக ஐடி விங் இராமநாதபுரம் ஒன்றிய அமைப்பாளர் கௌதம் என்பவர்   பிரபு என்பவரை கண்டித்ததன் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால்  ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக நேற்று நள்ளிரவு பிரபு (35), அலெக்ஸ் (36) உள்ளிட்ட 5 நபர்கள் கௌதம் என்பவரின் வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்தவர்களை மிரட்டியும், கற்களை எரிந்து வீட்டின் கண்ணாடிகளை சேதப்படுத்தி சென்றுள்ளனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது குறித்து தகவலறிந்த கேணிக்கரை போலீசார் ச‌‌ம்ப இடத்தில்   விசாரணை செய்து புகார் அளிக்க வருமாறு அறிவுறுத்தி சென்ற நிலையில் மீண்டும் நள்ளிரவு அதே நபர்கள்  கௌதம் வீட்டில் மூன்று பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசி விட்டு சென்றுள்ளனர். 

இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் தீபாவளிக்கு பட்டுப்புடவை கொடுக்காதது ஏன்? - இபிஎஸுக்கு திமுக அமைச்சர் சுளீர் கேள்வி...!

இதில் வீட்டில் முன்பு இருந்த சோபா, ஜன்னல் மற்றும் கதவு ஆகியவை எரிந்து சேதம் அடைந்துள்ளது. இதில்  யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்

இதையும் படிங்க: முந்திரி கொட்டைதனமா கேஸ் போட்டா இப்படிதான்! அடிமைகளின் குறுக்கு புத்திக்கு குட்டு.. விளாசிய திமுக..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share