பெட்ரோல், டீசல் விலை இனி தினம்தினம் ஏறுமுகம்?! மேற்காசிய பதற்றம் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசனை!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறை, 2017 ஜூன் முதல் அமலுக்கு வந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் தினசரி அடிப்படையில் மாற்றப்படும் நிலை உருவாகியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
2017 ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வந்த தினசரி விலை நிர்ணய முறையின்படி, ஒவ்வொரு நள்ளிரவு 12 மணிக்கும் அடுத்த நாளுக்கான விலை அறிவிக்கப்பட்டு வந்தது. இதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலையில் அடிக்கடி ஏற்ற இறக்கம் ஏற்பட்டது. 2021-ல் தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ₹100-ஐத் தாண்டியது. அதைத் தொடர்ந்து தீபாவளி பரிசாக பெட்ரோல் லிட்டருக்கு ₹5 மற்றும் டீசல் லிட்டருக்கு ₹10 குறைக்கப்பட்டது.
2022 மே மாதம் மத்திய அரசு காலால் வரியை குறைத்ததால் பெட்ரோல் லிட்டருக்கு ₹8 மற்றும் டீசல் லிட்டருக்கு ₹6 விலை குறைந்தது. 2024-ல் மீண்டும் லிட்டருக்கு ₹2 குறைப்பு செய்யப்பட்ட பிறகு பல மாதங்களாக விலை மாற்றம் இல்லாமல் நிலையாக இருந்தது.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! மேற்காசிய போரால் நீடிக்கும் பதற்றம்! எகிறும் ரேட்!
ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்காசியாவில் ஏற்பட்ட போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தது. இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த வெள்ளிக்கிழமை பெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹3.14 உயர்த்தின. டீசல் விலை லிட்டருக்கு ₹3.11 உயர்ந்தது. தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ₹103.67-க்கும், டீசல் லிட்டருக்கு ₹92.25-க்கும் விற்பனையாகிறது.
இந்நிலையில், நேற்று மீண்டும் நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு 82 காசும், டீசல் 86 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விலை உயர்வு ஏற்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் இனி சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தினசரி விலை மாற்றத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை நம்முடைய நாட்டை விட அதிகமாக உள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும் பட்சத்தில் மேலும் விலை ஏற்றம் தவிர்க்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் தினசரி பயணம் மற்றும் போக்குவரத்துக்கு அதிக செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகும் என அஞ்சுகின்றனர். அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் மக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
இதையும் படிங்க: மக்களுக்கு அறிவுரை மட்டுமே வழங்குகிறார் பிரதமர்! நெல்லையில் கனிமொழி எம்பி விமர்சனம்!