நடக்க முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... வாயை பொத்தி கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன்...!
வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாலாஜாபாத் அருகே வீட்டில் தனியாக இருந்த 30 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நபரை தர்ம அடி கொடுத்து போலிசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட வாலாஜாபாத் அருகே உள்ள அங்கம்பாக்கம் பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியை சார்ந்த 30 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று தனது தாய்,தந்தை ஆகியோர் மாடு மேய்க்க வெளியில் சென்று இருந்த போது அதே பகுதியை சார்ந்த பாலாகிருஷ்ணன் என்பவன் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் தீப்பெட்டி கேட்பது போல் உள்ளே வந்து மாற்றுத்திறனாளியிடம் பேச முயன்றுள்ளார்.
இதையும் படிங்க: நெல்லையில் தொடரும் பயங்கரம்... 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 2 வாரத்தில் இத்தனை வழக்குகளா?
அப்போது,வீட்டில் தாய்,தந்தை இல்லாததை அறிந்து கொண்ட பாலாகிருஷ்ணன் மாற்றுத்திறனாளி பெண் என்று கூட பாராமல் அவர் வாயை மூடி கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து அங்கிருந்து சென்றுள்ளான்.
பின்னர், வீட்டிற்கு வந்த தாய் மற்றும் தனது அண்ணன்களிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்த போது , உடனடியாக அவனை பிடித்து அடித்துள்ளனர்.
இது குறித்து அறிந்த பொதுமக்களும் தர்ம அடி கொடுத்து, காவல் உதவி எண்ணான 100க்கு அழைத்து நடந்த சம்பவத்தை குறித்து ஊர் மக்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணும் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பாலகிருஷ்ணனை கைது செய்து போலிசார் அழைத்து சென்றுள்ளனர்.
எழுந்து கூட நடக்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்புணர்வு சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிற்காமல் சென்ற ரத்தம்... 3 வயது பிஞ்சின் மரண போராட்டம்... மனதை உடைக்கும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்...!