ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழ்நாட்டின் சிலை! பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு...
ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழகத்தில் சிலைகள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
முதலாம் இராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் அவரது கடல்சார் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு, மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலின் கட்டுமானத் தொடக்கத்தை நினைவுகூரும் வகையில், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவுடன் ஜூலை 23 முதல் இன்று வரை ஆடி திருவாதிரை விழா ஐந்து நாள் கொண்டாட்டமாக நடைபெறுகிறது. இதன் நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் சென்றடைந்தார்.
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் பிரதமர் மோடி வழிபட்டார் பிரகதீஸ்வரர் கோவில் மண்டபங்கள் மற்றும் சிற்பங்களை பார்வையிட்டார்.
தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். சோழர் கால சிற்பங்கள் சோழர்களின் படை வலிமை நாணயங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டார். தொடர்ந்து சிவபெருமானை வழிபட்ட பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்தார்.
இதையும் படிங்க: களைக்கட்டும் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாட்டம் - களத்தில் இறங்கி கலக்கும் தமிழ்நாடு அரசு...!
தொடர்ந்து சிறப்பு நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி, விழா மேடையில் பேசினார். அப்போது, மாமன்னர்கள் ராஜராஜசோழன் ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலைகள் அமைக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இருவருக்கும் தமிழ்நாட்டில் பிரம்மாண்ட சிலைகள் நிறுவப்படும் என கங்கைகொண்ட சோழபுரத்தில் உறுதிப்பட தெரிவித்தார்.
சோழர்களைப் போல் சக்தியும் பக்தியும் நிறைந்த இளைஞர்கள் நாட்டில் 140 கோடி மக்களின் கனவை நிறைவேற்றுவர் என்றார். நாட்டின் பாதுகாப்பையே அனைத்தையும் விட பெரியதாக கருதுகிறோம் என்பதற்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு எடுத்துக்காட்டு எனக் கூறினார். நாட்டின் இறையாண்மை மீது தாக்குதல் தொடுத்தால் என்ன நடக்கும் என்பதை ஆபரேஷன் சிந்தூர் எடுத்துக் கூறியதாக தெரிவித்தார்.
ரோடு ஷோ ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது ஆபரேஷன் சிந்தூர் என்றே என்னை வரவேற்றார்கள் முழங்கினார்கள் என்று தெரிவித்தார். ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் நாட்டின் அடையாளம் பாரதத்தின் மெய்யான வல்லமையின் பிரகடனங்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மோடி விசிட்டிற்கு முன்பே முந்திக்கொண்ட மு.க.ஸ்டாலின்... ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடி அறிவிப்பு..!