×
 

மத்திய அரசின் திட்டங்கள் பெயரில் கஜானா நிரப்பிய பாஜக... காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு...!

மத்திய அரசின் திட்டங்களின் பெயரில் பாஜக நன்கொடை வசூலித்ததாக ஆர்டிஐ தகவலை சுட்டிக்காட்டி காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

இந்திய அரசியலின் அரங்கில், மத்திய அரசின் நலத்திட்டங்கள் பெயரில் பாஜக கட்சி தனது தேர்தல் நிதியை வசூலிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இது வெறும் அரசியல் விமர்சனமாக இல்லாமல், ஆர்.டி.ஐ தகவல்கள், நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் தேர்தல் பந்தங்கள் திட்டத்தின் வெளிப்படுத்தப்பட்ட தரவுகளால் ஆதரிக்கப்படும் கடுமையான குற்றச்சாட்டு. 2025 டிசம்பர் வரை இந்தப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.

மத்திய அரசின் திட்டங்களின் பெயரில் பாஜக நன்கொடை வசூலித்ததாக ஆர்டிஐ தகவலை சுட்டிக்காட்டி காங்கிரஸ் குற்றம் சாட்டை உள்ளது. கிசான் சேவா, ஸ்வச் பாரத் உள்ளிட்ட திட்டங்களின் பெயரில் பாஜக நன்கொடை வசூல் என காங்கிரஸ் குற்றம் சார்பில் இருக்கிறது.

மத்திய அரசின் திட்டங்களுக்கு மக்கள் கொடுக்கும் நன்கொடை பாஜகவிற்கு சென்றதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது மேலும் மத்திய அரசின் திட்டங்கள் பெயர் பாஜக தனது கஜானாவை நிரப்பியதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, 'சப்க இந்தியா', 'பேடி பச்சாவ் பேடி படாவ்', 'கிசான் சேவா' போன்ற மத்திய அரசின் பிரதான நலத்திட்டங்களை மக்களிடம் பிரபலப்படுத்துவதற்காக நரேந்திர மோடி அப்பை மற்றும் narendramodi.in போன்ற டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தினார். 

இதையும் படிங்க: மோடியின் கொள்கை தோத்து போச்சு... உள்நோக்கம் தான் இருக்கு... மக்களவையில் பிரியங்கா காந்தி விமர்சனம்...!

இந்த நிலையில், http://narendramodi.in , NaMo App மூலம் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. எனவே குறிப்பிட்ட இந்த மோசடி தொடர்பாக பிரதமர் மோடி விளக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்...!! - பாஜக சார்பில் போட்டியிடும் “சோனியா காந்தி” - காங்கிரஸை எதிர்த்து களமிறங்கிய சுவாரஸ்சியம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share