மோடியின் கொள்கை தோத்து போச்சு... உள்நோக்கம் தான் இருக்கு... மக்களவையில் பிரியங்கா காந்தி விமர்சனம்...!
மக்களவையில் நடைபெறும் சிறப்பு விவாதத்தில் பிரியங்கா காந்தி உரையாற்றினார்.
வந்தே மாதரம் பாடலை 150வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் விவாதத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, புனித பாடல் குறித்த விவாதத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைவதாக தெரிவித்தார். இந்திய நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய பாடல் வந்தே மாதரம் என்று பெருமிதம் கூறினார். வந்தேமாதரம் என்பதற்கு தாய் மண்ணே தலை வணங்குகிறேன் என்பது பொருள் என்றும் தெரிவித்தார்.
தலைமுறைகளை கடந்து உத்வேகம் அளித்து வருகிறது வந்தே மாதரம் பாடல் என்றும் குறிப்பிட்டார். வந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டு விழா, நெருக்கடி நிலையின் போது தற்செயலாக அமைந்து விட்டது என்றும் கூறியுள்ளார். 150 ஆண்டுகளுக்குப் பின் வந்தே மாதரம் பாடலின் புகழை மீண்டும் நிலை நிறுத்துகிறோம் என்றும் குறிப்பிட்டு பேசினார்.
இதனிடையே, மக்களவையில் நடைபெறும் சிறப்பு விவாதத்தில் பிரியங்கா காந்தி உரையாற்றினார். அப்போது, வந்தே மாதரம் சிறப்பு விவாதத்தில் பேசிய பிரதமர் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை கூறினார் என்று தெரிவித்தார். மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் மதிய பாஜக அரசிடமிருந்து ஒரு தீர்வும் இல்லை எனவும் குறிப்பிட்டு பேசினார். உண்மையான பிரச்சினைகளை திசை திருப்பவே கடந்த காலத்தை பற்றி பாஜக பேசி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்... தலைமைக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!
காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் தான் முதல் முறையாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது எனவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி குறிப்பிட்டு பேசினார். மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் வருவதால் வந்தேமாதரத்தை பாஜக கைகளில் எடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் தோல்வி அடைந்து விட்டதாகவும் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பாஜக தேர்தலுக்காக இருக்கிறது என்றும் நாங்கள் நாட்டிற்காக இருக்கிறோம் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: மெட்ரோவை தொடர்ந்து விமான துறையிலும் பாகுபாடு... MP சு. வெங்கடேசன் கண்டனம்..!