×
 

#BREAKING: மோடி... மோடி..! களைக்கட்டிய NDA பொதுக்கூட்டம்..! பிரதமரைக் கண்டதும் ஆரவாரம்..!

மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. கூட்டணி முடிவு செய்யும் பணியில் பல்வேறு அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக அதிமுகவுடன் தங்களது கூட்டணியை மீண்டும் உறுதி செய்திருந்தது. இதைத்தொடர்ந்து அன்புமணி தரப்பு பாமக, டிடிவி தினகரன் உட்பட பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தன. இன்னும் பல கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்று உறுதியுடன் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாகக் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இந்தக் கூட்டம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு என்டிஏ கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கும் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. மதுராந்தகம் சென்னை-திண்டிவனம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இடத்தில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி... சூடு பிடிக்கும் அரசியல் களம்..! பிரம்மாண்ட பொதுக்கூட்டம்..!

இந்தப் பொதுக்கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலிருந்தும் இருந்து ஏராளமான தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்று உள்ளனர். காலை முதலே பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சாரை சாரையாக மக்கள் புதிய தொடங்கினர். இதற்காக தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்தார். சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடியை கண்டதும் தொண்டர்கள் உற்சாகத்துடன் முழக்கங்களை எழுப்பினர். 

இதையும் படிங்க: MGR..! மகத்தான பங்களிப்பு... தொலைநோக்குப் பார்வை... புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share