×
 

பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு... விவசாயிகளுடன் கலந்துரையாடல்..! விழாக்கோலம் பூண்ட கோவை...!

கோவையில் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

கோவை கொடிசியாவில் இன்று இயற்கை விவசாயிகள் மாநாடு தொடங்கி உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். சிறப்பாகச் செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு அவர் விருது வழங்க உள்ளார். இந்த மாநாட்டில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

தொடர்ந்து ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் 'பி.எம். கிசான்' திட்டத்தில் 21-வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித்தொகையை விடுவிக்கிறார். பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சேர்ந்த 21 லட்சத்து 80 ஆயிரத்து 204 விவசாயிகள் பயன் அடையவுள்ளனர்.

ஆந்திராவில் விழாவினை முடித்துக் கொண்டு தனி விமான மூலம் பிரதமர் நரேந்திர மோடி கோவை வந்தடைந்தார். பிரதமர் மோடியை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பிரதமருக்கு கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர்கள் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதையும் படிங்க: #BREAKING: கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி... உற்சாக வரவேற்பு... உச்சகட்ட பாதுகாப்பு...!

பிரதமர் வருகையை ஒட்டி கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை கொடிசியாவில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விமான நிலையத்திலிருந்து கொடிசியா வரை பிரதமர் மோடி ரோடு ஷோ சென்றார். வழி நெடுகிலும் சாலையின் இரு புறங்களிலும் காத்திருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜக சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரின் கார் பூ மழையால் நனைந்தது. தொடர்ந்து மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் மோடி விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

இதையும் படிங்க: பிரதமர் வரும் நேரத்தில் இப்படியா?... கோவை, திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share