மிரட்டும் பாக்., சொல்லி அடிக்கும் இந்தியா..! அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் ஆலோசனை..!
எல்லையில் போர் பதற்றம் நீடித்துவரும் நிலையில் பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத் துறைச் செயலாளர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
கடந்த 22-ம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, பாகிஸ்தானியருக்கான விசா ரத்து, அட்டாரி எல்லை மூடல், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தால் இந்தியா போரை எதிர்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பகிரங்கமாக பேசி இருந்தது. பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல்களுக்கு இந்தியாவின் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் எல்லைப் பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது. போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலைகள் பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள இல்லத்தில் பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங்குடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் மோடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: இந்தியாவுல ஒரு உயிரை எடுக்க பாக். நூறு முறை யோசிக்கும்.. அசாதுதீன் ஓவைசி உறுதி..!
இதையும் படிங்க: பாகிஸ்தானுடன் போர் அபாயம்..! பிரதமருடன் விமானப்படை தளபதி திடீர் ஆலோசனை..!