×
 

பிரதமர் அருகே இபிஎஸ்..! பொதுக் கூட்ட மேடையில் குவிந்த கூட்டணி கட்சி தலைவர்கள்..!

மதுராந்தகத்தில் நடைபெறும் பிரதமர் பங்கேற்றுள்ள பொதுக்கூட்டத்தில் என் டி ஏ கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மதுராந்தகத்தில் இன்று நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மிகுந்த உற்சாகத்துடனும், மக்கள் கூட்டத்தின் அலை அலையான வருகையுடனும் களைகட்டியது. தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு என்டிஏ கூட்டணியின் முதல் பெரிய பிரச்சார நிகழ்ச்சியாக இது அமைந்தது. பிரதமர் நரேந்திர மோடி இதில் முக்கிய பங்கேற்பாளராக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

பிரதமர் மோடி காலை திருவனந்தபுரத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர், சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகத்துக்கு சென்ற அவர், ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகத்திற்கு சென்றார்.

மேடைக்கு வந்ததும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். மக்கள் திரளான அளவில் குவிந்து வந்ததால், கூட்டம் மக்கள் வெள்ளமாக மாறியது. பல இடங்களில் "மோடி... மோடி" என்ற முழக்கங்கள் எழுந்தன. பிரதமர் மோடி இருக்கையின் பக்கத்திலேயே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்திருந்தார். அவரிடம் மிகவும் மகிழ்ச்சியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இதையும் படிங்க: சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி... சூடு பிடிக்கும் அரசியல் களம்..! பிரம்மாண்ட பொதுக்கூட்டம்..!

தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்த விழா மேடையில், கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் அமர்ந்துள்ளனர். பிரதமர் பங்கேற்றுள்ள பொதுக்கூட்ட மேடையில், எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ், நைனார் நாகேந்திரன், அண்ணாமலை, ஜி கே வாசன், ஏசி சண்முகம், ஜான் பாண்டியன், பூவை ஜகன் மூர்த்தி, கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தமிழிசை தமிழிசை சௌந்தரராஜன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும் அமர்ந்து உள்ளனர்.

இதையும் படிங்க: மத்திய அரசு தமிழகத்திற்கு இழைத்த துரோகங்கள்... லிஸ்ட் போட்ட DMK..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share