×
 

அடுத்தடுத்து நிலநடுக்கம்! ஆடிப்போன வெனிசுலா! சுனாமி வார்னிங்! ஆதரவுக் கரம் நீட்ட இந்தியா தயார்! மோடி அறிவிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் ஏற்பட்டுள்ள பேரழிவைக் கண்டு ஆழ்ந்த துயரம் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.1 மற்றும் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கங்கள் அந்நாட்டின் கரீபியன் கடற்கரைப் பகுதியில் உள்ள மோரோன் பகுதிக்கு மேற்கே 28 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டன. 

13 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள இந்த நிலநடுக்கங்கள் சில நிமிட இடைவெளியில் ஏற்பட்டதால் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த பேரழிவில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். 700 பேர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது.

இதையும் படிங்க: வடகிழக்கு இந்தியா முன்னேற்றத்திற்கான நுழைவு வாயில்! பிரதமர் மோடி பெருமிதம்! ரூ.47,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்!

இந்த சோக சம்பவத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “வெனிசுலாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பேரழிவைக் கண்டு ஆழ்ந்த துயரம் கொள்கிறேன். இந்திய மக்களின் சார்பில் வெனிசுலா அரசுக்கும் மக்களுக்கும், குறிப்பாக தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், “காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்தக் கடினமான சூழலில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் இந்தியா உறுதுணையாக நிற்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதேவேளையில், ஜப்பானின் இவாட்டே கடலோரப் பகுதியில் இன்று அதிகாலை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உலக நாடுகள் உடனடி உதவி வழங்க வேண்டும் என சர்வதேச அமைப்புகள் வலியுறுத்துகின்றன. 

இதையும் படிங்க: உலகின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதி இந்தியாவில் தான் நடக்கிறது! பிரதமர் மோடி பெருமிதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share