×
 

களைகட்டிய கன்னியாகுமரி..! NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ரோடு ஷோ..!!

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி நடத்திய ரோடு ஷோவில் இபிஎஸ், நைனார் நாகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, வாக்கு சேகரித்து வருகிறார்கள். 

அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ செல்வதற்காக பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நாகர்கோவிலில் ரோட் ஷோ சென்று பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். வேப்பமூடுத் தொடங்கி வடசேரி வரை சுமார் 1.5 km தொலைவிற்கு அவர் ரோடு ஷோ நடத்தினார்.

கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நடத்திய இந்த ரோடு ஷோவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். ரோடு ஷோ செல்வதற்கு முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதையும் படிங்க: தமிழக சட்டமன்ற தேர்தல்..!! மகளிருக்கு ரூ.2000..! பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவுடன் இணைந்து பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமரின் இந்த வருகை என்.டி.ஏ. கூட்டணிக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் போட்டியிடும் என்.டி.ஏ. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் பேசியதாகவும், அவர்களின் வெற்றிக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த ரோடு ஷோ அமைந்துள்ளது. 

இதையும் படிங்க: வாக்குப்பதிவு நடக்கும் இடங்கள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு..! தேர்தல் ஆணையம் திட்டம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share