×
 

ஒவ்வொரு துறையிலும் ஊழல்... பணம் போகும் இடம் குழந்தைக்கும் தெரியும்..! திமுகவை வசைப்பாடிய பிரதமர் மோடி..!

மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிய போது திமுக அரசை சரமாரியாக சாடினார்.

மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது, பாரத் மாதா கி ஜே எனக் கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார். அதிமுக பொதுச்செயலாளர் EPS, டி டி வி தினகரன், அன்புமணி, ஜி கே வாசன், நயினார் நாகேந்திரன், பூவை ஜகன் மூர்த்தி என கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பெயரை கூறி வரவேற்றார். தொடர்ந்து தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என்ற தமிழில் கூறினார்.

பிரதமர் மோடி உரையை தொடங்கியதும் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் எனது முதல் பயணம் பொங்கலுக்குப்பின் சிறப்பான ஆனந்தம் நிறைந்திருக்கிறது என்று தெரிவித்தார். ஏரி காத்த ராமரை வணங்குவதாகவும், தமிழ்நாட்டின் நலநிற்காக வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணமான மனிதர் எம்ஜிஆர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறினார். இங்கு அலைகடலென மக்கள் கூட்டம் திரண்டு இருக்கிறது என்றும் இது தமிழ்நாடு மட்டுமல்லாது தேசம் அனைத்திற்கும் ஒரு செய்தியை கொண்டு சேர்க்கிறது என்று தெரிவித்தார். தமிழ்நாடு இப்போது மாற்றத்திற்கு தயாராகிவிட்டது என்பதை குறிப்பதாக கூறினார். தமிழ்நாடு திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட துடிக்கிறது என்று கூறினார். தமிழ்நாடு தற்போது என் டி ஏ ஆட்சியை விரும்புவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டணும்..! செய்வீர்களா? ஜெ. பாணியில் இபிஎஸ் FIRE ஸ்பீச்..!

என் டி ஏ குடும்பத்தின் மூத்த தலைவர்கள் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க சேர்ந்திருக்கிறார்கள் என்றும் ஒரே உறுதிப்பாட்டோடு இங்கு இணைந்து இருக்கிறார்கள்., தமிழ்நாட்டை நான் திமுக அரசிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் ஒன்று சேர்ந்து இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த பாதுகாப்பான ஊழலற்ற மாநிலமாக உருவாக்க வேண்டும் என்றும் இதை தன்னால் தெளிவாக காண முடிகிறது என்றும் திமுகவின் கவுண்டவுன் தொடங்கிவிட்டது என்று கூறினார். பிரதமர் பேசிக் கொண்டிருந்தபோது அவரது தாயாரின் புகைப்படத்தை சிறுநீர் ஒருவர் காண்பித்தார்.

அப்போது அந்த புகைப்படத்தை வாங்கி வருமாறு அந்த சிறுமியின் பெயர் மற்றும் முகவரியை வாங்கி கொடுக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். மாஃபியா, கிரைம், ஊழல் ஆட்சியை திமுக செய்வதாக குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக நம்பிக்கை துரோகத்தை இழைத்துவிட்டது என்று குற்றம் சுமத்தினார். திமுக அரசை CMC (CRIME, MAFIA, CORRUPTION) அரசு இன்று விமர்சித்துள்ளார்.  திமுகவினர் வளர வேண்டும் என்றால் ஆமாம் சாமி போட வேண்டும் என்று தெரிவித்தார். திமுக ஆட்சியில் ஊழல் மலிந்து இருப்பது குழந்தைக்கு கூட தெரியும் என்றும் தெரிவித்தார்.

ஒவ்வொரு துறையிலும் ஊழல் என்றும் பணம் யாருக்கு செல்கிறது என்பது சிறு குழந்தைக்கும் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார். ஒரு குடும்பத்தின் நலனுக்கானது திமுக ஆட்சி என்று பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்காக மூன்று லட்சம் கோடி நிதி கொடுத்ததாகவும் காங்கிரஸ் ஆட்சியில் குறைவான நிதியை கொடுக்கப்பட்டது என்றும் மும்மடங்கு அதிக நிதியை தங்கள் அரசு கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பதினோரு லட்சம் கோடி அளவிற்கான திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்திருப்பதாகவும் கூறினார். தமிழ்நாட்டின் மிகப்பெரிய பலமே விவசாயிகளும், மீனவர்களும்தான்., தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது., குற்றங்களை கட்டுப்படுத்தினார் ஜெயலலிதா என்று தெரிவித்தார். தமிழகத்திற்கு இரட்டை எஞ்சின் ஆட்சி தேவை எனவும் தெரிவித்தார். முதலீட்டாளர்களின் விருப்பமான நாடாக இந்தியா திகழ்ந்து வருவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: பிரதமர் அருகே இபிஎஸ்..! பொதுக் கூட்ட மேடையில் குவிந்த கூட்டணி கட்சி தலைவர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share