×
 

நள்ளிரவில் மீண்டுமொரு செல்ஃபி வீடியோ... வினாத்தாள் கசிவு மாஃபியாக்களுக்கு பிரதமர் மோடி வார்னிங்...!

வினாத்தாள் கசிவு மாஃபியாக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிய சட்டத்திருத்தம் மூலம் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக நாடு முழுவதும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேர்வு முறையை பாதுகாப்பாக மாற்றும் நோக்கில் கொண்டு வரப்பட்ட வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது.

இந்த மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி வடிவிலான வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதன் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துரைத்துள்ளார்.

சமீப காலமாக பிரதமர் மோடி, அரசின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் சாதனைகளை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில், செல்ஃபி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். எளிய மொழியில் மக்களிடம் உரையாடும் இந்த பாணி, அவரது சமூக வலைதள பதிவுகளில் தனித்துவமான அம்சமாக மாறியுள்ளது. அதே தொடர்ச்சியில், இந்த முறை தேர்வு முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய சட்டச் சீர்திருத்தம் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: மேகதாது விவகாரத்தில் அதிருப்தி..! மத்திய அரசு நிலைப்பாட்டை எதிர்த்த முதல்வர் விஜய்..! பிரதமர் மோடிக்கு கடிதம்..!!

வீடியோவில் பேசிய பிரதமர் மோடி, "கடந்த பல தசாப்தங்களாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வினாத்தாள் கசிவு என்ற மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வந்துள்ளன. இதனால் கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்காக, தேர்வு முறையில் தொழில்நுட்ப பயன்பாடு, விரைவான நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் மாநில அரசுகளின் ஆலோசனைகளை ஒருங்கிணைத்து பல்வேறு சீர்திருத்தங்களை நமது அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் இனி எந்த சூழலிலும் தப்பிக்க முடியாது. அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையை பாதுகாக்கவும், மாணவர்களின் உழைப்புக்கு உரிய மதிப்பு கிடைக்கவும் மத்திய மற்றும் மாநில அளவிலான இத்தகைய சீர்திருத்தங்கள் மிகவும் அவசியமானவை" என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

புதிய சட்டத்திருத்தத்தின் மூலம், வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடு மற்றும் அமைப்புசார்ந்த மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், தேர்வு முறையை மேலும் வெளிப்படையாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சி...! வெள்ளிப் பதக்கத்தை வென்ற தமிழக வீரர்... பிரதமர் மோடி வாழ்த்து..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share