×
 

சூடுபிடிக்கும் எலக்ஷன்..! களமாடும் அன்புமணி... பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு..!!

பாமகவின் தேர்தல் அறிக்கையை நாளை அன்புமணி ராமதாஸ் வெளியிடுகிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் தரப்பு முக்கிய அரசியல் முடிவுகளை எடுத்து வருகிறது. ஜனவரி 7 அன்று சென்னையில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்த அன்புமணி ராமதாஸ், தனது கட்சி NDA கூட்டணியில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அ.தி.மு.க. தலைமையிலான இந்தக் கூட்டணியில் பாஜகவுடன் இணைந்து பாமகவும் இடம்பெற்றுள்ளது. கூட்டணி உடன்பாட்டின்போது, பாமகவுக்கு 18 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்தத் தொகுதிகளில் சேலம் மேற்கு, தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார் கோயில், கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் வடக்கு, அம்பத்தூர் உள்ளிட்டவை அடங்கும்.

இந்த ஒதுக்கீடு அ.இ.அ.தி.மு.க. தலைமையில் இறுதி செய்யப்பட்டது. 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். குறிப்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: #BREAKING: விஜய்க்கு போட்டி யார்? பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!! முழு விவரம்..!!

இந்த தொகுதியில் திலகபாமா களம் காண்கிறார். இந்த தொகுதி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. நாளை காலை 11 மணியளவில் பாமக தலைவர் அன்புமணி தேர்தல் அறிக்கையை வெளியிட இருக்கிறார். அன்புமணி தனது தேர்தல் அறிக்கையில் அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் காங்கிரஸில் ஐக்கியம்..!! பாமகவில் சலசலப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share