×
 

“அன்புமணி அறிவித்த கூட்டணி செல்லாது; ராமதாஸ் அமைப்பதே வெற்றிக் கூட்டணி!” - தைலாபுரத்தில் பரபரப்புத் தகவல்!

“யாருடன் கூட்டணி என ராமதாஸ் 2 நாட்களில் அறிவிப்பார்!” - பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி அதிரடிப் பேட்டி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகளும், அக்கட்சியின் செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி பரசுராமன், கூட்டணி குறித்து மிக முக்கியமானத் தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீகாந்தி கூறியதாவது, யாருடன் கூட்டணி என்பது குறித்து டாக்டர் ராமதாஸ் அவர்கள் இன்னும் இரண்டு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். மூத்தத் தலைவர்களுடன் அவர் இது குறித்துத் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

அன்புமணி ராமதாஸ் தன்னிச்சையாக அறிவித்தக் கூட்டணி செல்லாது. ராமதாஸ் ஐயா அவர்கள் எந்தக் கூட்டணியை அறிவிக்கிறாரோ, அதுதான் உண்மையான பாமகவின் வெற்றிக் கூட்டணியாக இருக்கும். அதிமுக தரப்பிலிருந்து இதுவரை கூட்டணி குறித்து யாரும் பேசவில்லை என்று குறிப்பிட்ட அவர், அரசியலில் எந்த மாற்றமும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கூட்டணி பற்றி வாய் திறக்க கூடாது! - திமுக நிர்வாகிகளுக்கு ஆர்.எஸ். பாரதி அதிரடி உத்தரவு!

பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிலவும் அதிகாரப் போட்டியால் கட்சி இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ள சூழலில், ஸ்ரீகாந்தியின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் அன்புமணி ராமதாஸ் அதிமுக-பாஜக கூட்டணியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ராமதாஸ் தரப்பு திமுக அல்லது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன்  பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, திமுக கூட்டணியில் விசிக தலைவர் திருமாவளவன் எதிர்ப்புத் தெரிவிப்பதாலும், அதிமுக கூட்டணியில் அன்புமணி இருப்பதாலும், ராமதாஸ் அவர்கள் தவெக-வுடன் இணையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "எங்க நின்னாலும் நான் ஜெயிப்பேன்!" - 2026 தேர்தல் களம் குறித்து விஜயபிரபாகரன் அதிரடி முழக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share