×
 

ராமதாஸ் ஐசியூவிற்கு போனாரா? மகன் கடமையில் இருந்து தவறிய அன்புமணி... பாமக MLA அருள் பகிரங்க குற்றச்சாட்டு...!

மகன் என்ற கடமையிலிருந்து தவறிவிட்டார் அன்புமணி என சட்டமன்ற உறுப்பினர் அருள் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பினார். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் ராமதாசை அனைத்து தலைவர்களும் பார்த்து , நலம் விசாரித்த நிலையில் அன்பு மணி தொலைத்து விடுவேன் என பேசியது அவரது ஆற்றாமையை காட்டுகிறது என சேலத்தில் சட்டமன்ற உறுப்பினரும் பாமக மாநில இணை பொது செயலாளருமான அருள் தெரிவித்துள்ளார்.

இன்று சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அருள் எம்.எல்.ஏ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாமக நிறுவனரும் கட்சியின் தலைவருமான ராமதாஸ் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , ஆஞ்சியோகிராம் சிகிச்சை பெற்றார் என்றும் அப்போது அவரை மருத்துவமனைக்கு வந்து பார்த்த முதல்வர் மு.க ஸ்டாலின் , அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை , விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் , நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் மருத்துவர் ராமதாசை சந்தித்து நலம் விசாரித்தனர் என்றார். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

ஆனால் அப்போலா மருத்துவமனைக்கு வந்த அன்புமணி, மருத்துவரை மட்டும் சந்தித்து பேசிவிட்டு, ராமதாசை சந்திக்காமலேயே சென்று விட்டார் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: முதன் முறையாக இணைய வழி கிராம சபை கூட்டம்... முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸ் குறித்து தவறான தகவலையும் செய்தியாளர்களிடம் தெரிவித்து சென்றார் என்றும் ராமதாஸ்-க்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டது. அவர் ஐசியூவுக்கு கொண்டு செல்லப்படவில்லை., ஆனால் ராமதாஸ், ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என செய்தியாளர்களிடம் பேட்டியை கொடுத்து ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியவர் அன்புமணி என தெரிவித்தார். ராமதாஸ் சிகிச்சை குறித்து தவறான தகவலை பரப்பியவர் அன்புமணி என்றும் ஒரு மகன் என்ற கடமையிலிருந்து அன்புமணி தவறிவிட்டார் எனவும் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: RAIN ALERT: குடை எடுத்தாச்சு... 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share