×
 

பாமக வாகனங்களுக்கு தடை - 13 ஆண்டுகளுக்குப் பிறகும் அதை மறக்காத காவல்துறை...!

13 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கலவரம் எதிரொலியால் பாமக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2013ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் பாமக சார்பில் சித்திரை பௌர்ணமி தினத்தன்று வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழுநிலவு பெருவிழா நடைபெற்றது.  இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பா.ம.க-வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் மரக்காணம் வழியே சென்றபோது, அவர்களுக்கும் பட்டியலின சமூக மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யபட்ட 20 பேரை விடுதலை செய்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இதனிடையே,  மாமல்லபுரத்தில் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள வன்னியர் சங்க மாநாட்டிற்கு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதித்து மாவட்ட காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 13 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கலவரம் எதிரொலியால் பாமக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தமிழக மீனவர்களை வஞ்சிக்கும் சிங்கள அரசு.. இனியும் மௌனம் காக்காமல் நடவடிக்கை எடுங்கள்.. ராமதாஸ் வலியுறுத்தல்..!

மாமல்லபுரத்தில் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள வன்னியர் சங்க மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்ல தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மார்க்கங்களில் இருந்து மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக மாமல்லபுரம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களில் ஒலிப்பெருக்கி பயன்படுத்த கூடாது என்றும் மதுப்பாட்டில்கள், ஆயுதங்களை எடுத்து செல்ல கூடாது என்றும் வாகனங்களில் செல்பவர்கள் கோஷங்களை எழுப்ப கூடாது என்றும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையின் உத்தரவுகளை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாமக மாநாட்டில் வெடித்த சர்ச்சை... அன்புமணி செய்த தரமான சம்பவம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share