×
 

அன்புமணியை அரெஸ்ட் பண்ணுங்க... போர்கொடி தூக்கிய பாமக எம்எல்ஏ அருள்...!

அன்புமணியை கைது செய்ய வேண்டும் என பாமக MLA அருள் வலியுறுத்தி உள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தொடர்ந்து ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டு வரும் நிலையில் பிரச்சனை நீண்டு வருகிறது. இதற்கிடையில் பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாமக எம்.எல்.ஏ. அருள் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பேச சட்டமன்ற உறுப்பினர் அருள், அன்புமணி வாழ்க எனக் கூறி தங்கள் கார் மீது தாக்குதல் நடத்தியதாகவும் 15க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார்.

காரை விட்டு வெளியில் வந்திருந்தால் தான் கொல்லப்பட்டிருப்பேன் என்று கூறிய அவர், ஐந்து பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அருள் தெரிவித்து இருந்தார். அராஜகத்தை கைகளில் எடுக்க வேண்டாம் என்றும் சிறந்த இளைஞர்களை தவறாக வழி நடத்தாதீர்கள் என்று அன்புமணிக்கு வேண்டுகோள் விடுத்தார். தாங்கள் அய்யா ராமதாஸ் வழியில் அமைதியான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

இதையும் படிங்க: காட்பாதருக்கு மேல் காட்பாதர் இருக்காங்க... ஊழல் நடந்தது உண்மை! அடித்துக் கூறும் அன்புமணி...!

நாங்கள் அராஜகத்தை நம்புபவர்கள் அல்ல சட்டத்தை நம்புகிறோம் என்று கூறினார். மேலும், சட்டம் தன் கடமையை செய்யும் என்று தெரிவித்தார். அன்புமணி தரப்பினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து ராமதாஸ், ஜி. கே. மணி ஆகியோர் தொலைபேசியில் அழைத்து என்னிடம் பேசினர் என்று MLA அருள் கூறி இருந்தார். இதனிடையே, ஆட்கள் ஏவி தன் மீது தாக்குதல் நடத்திய அன்புமணியை கைது செய்ய வேண்டும் என சேலம் மேற்கு மாவட்ட எம்எல்ஏ அருள் வலியுறுத்தி உள்ளார்.  

இதையும் படிங்க: வன்னியபுரத்தில் அரங்கேறிய பாலியல் கொடூரம்... பின்னணியில் யார்?... அன்புமணி ஆவேசம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share