×
 

அன்புமணி, வடிவேல் ராவணன், திலகபாமா - மூன்று பேரையும் சிங்கிள் ஆளாக மிரளவைத்த பாமக எம்.எல்.ஏ...!

அன்புமணி ராமதாஸ் ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு கூறிய கருத்துக்கு பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் பதிலளித்துள்ளார். 

வழக்கறிஞர் பாலு  பொய்யான ,  தவறான உண்மைக்கு மாறான,  சட்ட விதிகளுக்கு முரண்பட்ட தகவலை வெளியிட்டு வருகிறார். 46 ஆண்டுகளாக பாமக நிறுவனர் ராமதாஸ் கட்டிக்காத்த இயக்கத்தை அவரிடம் இருந்து பறிக்க நினைக்கிறார்கள். இந்தக் கட்சிக்காக 21 பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர் என பாமக எம்.எல்.ஏ. அருள் தெரிவித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற நிர்வாக குழுவில் செயல் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டார். அந்த வகையில் செயல் தலைவராக இருந்து பொதுக்குழுவை கூட்ட அன்புமணிக்கு, வடிவேல் ராவணன் திலகபாமா ஆகியோருக்கு அதிகாரம் இல்லை.

தற்போது வழக்கறிஞர் பாலு தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாக குறிப்பிடும் கடிதத்தில் அன்புமணி பெயர் எங்கேயும் இடம் பெறவில்லை. மொத்தத்தில் பொய்களை மறைத்து இட்டுக்கட்டி உண்மைக்கு மாறான தகவலை வழக்கறிஞர் பாலு தெரிவித்து வருகிறார். இது ஏற்புடையதல்ல. 

இதையும் படிங்க: ஒரே பாமக தான்... அன்புமணியே தலைவர்! திலகபாமா பரபரப்பு பேட்டி

ஒட்டுமொத்த பாட்டாளி மக்கள் சொந்தங்கள் அனைவரும் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் தலைமையில் அணிவகுத்து நிற்கின்றனர். இதனால் நிர்வாக குழுவில் நீக்கப்பட்டவருக்கு பொதுக்குழுவிற்கோ செயற்குழுவிற்கோ கூட்டம் கூட்ட அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் அனுப்பி உள்ளார். 

ஆனால் அவர்கள் அனுப்பிய கடிதத்தில் கட்சியின் அலுவலக முகவரி மாறியுள்ளது.
வேண்டுமென்றே திட்டமிட்டு முன்கூட்டியே  முகவரியை மாற்றியுள்ளனர்.
பொய்யான தகவலை பரப்பி கட்சி கொடியை சின்னதையோ பயன்படுத்தக் கூடாது என்று சொல்ல வழக்கறிஞர் பாலு மட்டுமல்ல வேறு யாராலும் கூற  முடியாது என்றும் அருள்  எச்சரிக்கை விடுத்தார். கட்சியின் நலன் கருதி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ராமதாஸ் அறிவிப்பார் என்றார்.

இதையும் படிங்க: அன்புமணியே தலைவர்! ஒரே குஷி தான்... பாமக அலுவலகத்தில் கொண்டாட்டம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share