நாளை கூடுகிறது பாமக அவசர ஆலோசனைக் கூட்டம்.. மா.செ.களுக்கு ராமதாஸ் அழைப்பு!
நாளை நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அவசரக் கூட்டத்தின் பங்கேற்க ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டம் தைலாபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கூட்டணி முடிவு, கட்சி பூசை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணியும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த சித்திரை முழுநிலவு மாநாட்டில், சில மாவட்ட செயலாளர்கள் சரிவர பணியாற்றவில்லை என்ற எச்சரிக்கை வகையில் ராமதாஸ் பேசி இருந்தார். அதுமட்டுமில்லாத தந்தை மகன் இடையிலான பூசல் விவகாரம் கட்சியில் தலை தூக்கி உள்ளது... அவ்வப்போது அந்த பிரச்சனை தணிந்தாலும் இன்னும் முற்றுப்பெறவில்லை.
இதையும் படிங்க: #BREAKING: தவெக +தேமுதிக +பாமக மெகா கூட்டணி? விஜயின் தேர்தல் கணக்கு..!
இந்த விவகாரங்கள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. மாவட்டச் செயலாளரின் கட்சியின் பொறுப்பாளர்கள் என அனைவரும் கூட்டத்திற்கு பங்கேற்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 26 நிமிடத்தில் ஜோலியை முடித்த ராமதாஸ்... செம்ம அப்செட்டில் அன்புமணி அண்ட் கோ...!