×
 

பாமக ஊடகப் பிரிவு பொறுப்பாளருக்கு கொலை மிரட்டல்... அப்படியே விடக்கூடாது! நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்...!

பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு அச்சுறுத்தல் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தினார்.

வந்தவாசி அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக ஊடகப்பிரிவு பொறுப்பாளர் சந்தோஷ் குமாரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி சமூக ஊடக பிரிவின் பொறுப்பாளர் சந்தோஷ் குமாரை அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்கிற நபர் கூலிப்படைகளை வைத்து, அந்தக் கூலிப்படையில் செயல்பட்ட வரதன், பிரபு, விக்னேஷ் உள்ளிட்டோரின் துணைக் கொண்டு சந்தோஷ் அவர்களை கடத்தி சென்று தாக்கி, அவரது கைபேசியை கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த கைபேசியின் மூலம் பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் சோழன் குமார் வாண்டையாருக்கு தொடர்பு கொண்ட சாலவேடு பாபு என்ற நபர் சோழன் குமார் வாண்டையார் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், அவர்களை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டல் விட்டு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பிலே சமூக ஊடக பணி செய்பவர்களுக்கு ஒரு கூட்டம் இதே போன்ற அச்சுறுத்தலை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது என்றும் இந்த கூட்டத்திற்கு தலைவராக வந்தவாசி பகுதியை சேர்ந்த ஒருவர் செயல்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக ராமதாஸ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஐயாவைப் பார்த்துக்க துப்பில்ல… சும்மா பேசிக்கிட்டு... அன்புமணிக்கு ராமதாஸ் பதிலடி

அவர் பெயரை சொல்லி சாலவேடு பாபு மிரட்டல் விடுத்துள்ளது அவரது பேச்சின் பதிவிலிருத்து தெரிய வருகிறது என்றும் இந்த நிகழ்விற்கு தமிழக காவல்துறை உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கூலிப்படையாக செயல்பட்ட பிரபு, வரதன், விக்னேஷ் மற்றும் இவர்களுக்கு தலைவராக இருந்த சாலவேடு பாபு மீது சட்ட நடவடிக்கை எடுத்தும், இவர்களுக்கு பின்புலமாக உள்ள நபரைக் கண்டறிந்து பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக ஊடக பிரிவின் சந்தோஷ், சோழன் குமார் வாண்டையார் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: ஜி.கே.மணியை விரட்டாமல் விடமாட்டாங்க போலயே... கருப்புச்சட்டையில் கலவரத்தை ஆரம்பித்த பாமக எம்.எல்.ஏ.க்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share