"எனக்கு ஓய்வே கிடையாது" - மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ராமதாஸ்...!
உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வீடு திரும்பினார்.
உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வீடு திரும்பினார்.
நேற்று முன்தினம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர், அவரது இதயம் ஆரோக்கியமாக இருப்பதாகவும், இரண்டு நாட்கள் மட்டும் மருத்துவர் கண்காணிப்பில் ஓய்வில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
பிறகு அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் ராமதாஸ் இருந்தார். மருத்துவமனையில் அவரை முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், மநீம தலைவர் கமல் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அதேநேரத்தில் நேற்று காலை மருத்துவமனைக்கு வந்த அவரது மகன் அன்புமணி, ராமதாசை பார்க்காமல் டாக்டர்களிடம் பேசிவிட்டு சென்றார். அவரது தாயார் சரஸ்வதியையும் சந்தித்து பேசியிருந்தார்.
இதையும் படிங்க: அப்பல்லோவில் பாமக நிறுவனர் ராமதாஸ்.. நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் துணை முதல்வர்..!!
இந்நிலையில், சிகிச்சை முடிந்த நிலையில், ராமதாஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் வீட்டிற்கு புறப்படும் போது, டாக்டர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினரா என நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராமதாஸ், ' எனக்கு ஓய்வே கிடையாது,' எனக்கூறிவிட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: தயவு செஞ்சி வராதீங்க... அன்புமணி தலையில் இடியை இறங்கிய ஜி.கே.மணி...!