POCSO நீதிமன்றங்களுக்கு காலக்கெடு..! டிஜிபிக்கு பறந்த உத்தரவு... அடுத்தடுத்து அதிரடி காட்டிய ஹைகோர்ட்..!!
போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவில் முடிக்க முடியவில்லை எனும் குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே தொடர்ந்து வருகிறது. இந்தப் பிரச்னை சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடமிருந்தும், நீதிமன்றங்களிலும், ஊடகங்களிலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உரிய நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம், அவர்களின் மன உளைச்சலை அதிகரிப்பதோடு, சமூக நம்பிக்கையையும் பாதிக்கிறது.தமிழகத்தில் பாதுகாப்பு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2026 ஜூன் மாத நிலவரப்படி, மாநிலத்தின் 38 மாவட்டங்களிலும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 18,733 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுரை, திருப்பூர், சென்னை, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒவ்வொரு சிறப்பு நீதிமன்றத்திலும் நூற்றுக்கணக்கான வழக்குகள் குவிந்துள்ளன.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள மாவட்டங்களில் தனி POCSO நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றாலும், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை தாண்டியிருந்தும், மொத்தம் 20 சிறப்பு நீதிமன்றங்கள் மட்டுமே செயல்படுகின்றன. இது தீர்வுக்கான முக்கிய தடையாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி! சிபிசிஐடி வழக்கில் வெள்ளத்துரைக்கு முன்ஜாமீன் மறுப்பு!
இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்கை இரண்டு மாதங்களில் முடிப்பர் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. போக்சோ வழக்கு விசாரணையை ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும் என்று போக்சோ, மாவட்ட மகளிர் நீதிமன்றங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சிறப்பு அதிரடிப்படையை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும் என்று டிஜிபிக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காகிதத்தில் தான் நடவடிக்கை இருக்கா? தெரு நாய் பிரச்சனையில் சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!