நைட் 10 மணிக்கு மேல போலீஸ் பண்ற காரியமா இது?... குண்டுக்கட்டாய் தூக்கி கைது செய்த சக காவலர்கள்...!
தனியார் மதுபான கூடத்தில் ரகளையில் ஈடுபட்ட போலீஸை சக போலீசாரே கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் எதிரே ஜாலி மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபானக்கூடம் இயங்கி வருகிறது. இந்த மதுபான கூடத்தில் இருவர் மது போதையில் ரகளையில் ஈடுபட்டு வருவதாகவும் அங்கு உள்ள சிலரை மது பாட்டிலை உடைத்து தாக்க முற்பட்டதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக அங்கு வந்த பெரியகுளம் காவல்துறையினர் மது போதையில் ரகளையில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்களை பிடித்து வெளியே கொண்டு செல்ல முற்பட்டனர். அப்போது மது போதையில் இருந்த இருவரும் காவலர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மேலும் காவலர்கள் வரவழைக்கப்பட்டு இருவரையும் மடக்கிப் பிடித்து ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் அழைத்த செல்ல முற்பட்ட போது ஆட்டோவில் ஏற மறுத்த மது பிரியர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையும் படிங்க: இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!
இதனைத் தொடர்ந்து கூடுதல் காவலர்கள் மற்றும் காவல் துறை வாகனம் வரவழைக்கப்பட்டு ரகளையில் ஈடுபட்ட இருவரையும் காவல்துறை வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரகளையில் ஈடுபட்டதில் ஒருவர் தென்காசி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணி புரியும் சிதம்பரம் என தெரிய வந்தது.
மேலும் காவலர் சிதம்பரம் விடுமுறையில் சொந்த ஊரான பெரியகுலத்திற்கு வருகை தந்த நிலையில் அவருடைய நண்பர் அன்பு என்பவருடன் சேர்ந்து மது போதையில் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து இருவர் மீதும் பெரியகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: காவலர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! தெலங்கானாவில் பிறந்தநாள், திருமண நாளுக்கு லீவ்..!