#BREAKING: விஜய்யின் நீலாங்கரை வீட்டில் போலீசார்.. காரணம் என்ன..??
சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு போலீசார் வருகை தந்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜயின் இன்றைய கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் 8 குழந்தைகள், 16 பெண்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் பலியானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 50 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இச்சம்பவத்தை அறிந்ததும் உடனடியாக கரூர் மாவட்ட ஆட்சியர், போலீஸ் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இது துயரமான சம்பவம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவித்ததோடு, இரவோடு இரவாக தனி விமானம் மூலம் கரூர் புறப்பட்டார். மேலும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை ஆறுதல்படுத்தினர்.
இதையும் படிங்க: #BREAKING: இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்.. கரூர் சம்பவம் குறித்து விஜய் இரங்கல்..!!
போலீஸ் விசாரணையின்படி, காவல்துறை நிபந்தனைகளை தவெக மீறியதே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை. விஜயின் தாமதமும், ஏற்பாடுகளின் குறைபாடும் சுட்டிக்காட்டப்படுகிறது. இச்சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்நிலை விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே தவெக தலைவர் விஜய், திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை திரும்பினார். மேலும் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்து, தனது எக்ஸ் தளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். விஜய்யின் பாதுகாப்பிற்காகவா அல்லது கரூர் சம்பவம் குறித்து விசாரிப்பதற்கா என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை.
இதையும் படிங்க: #BREAKING பாட்டிலுக்கு 10 ரூபாய்.. பாட்டு பாடி செந்தில் பாலாஜியை வம்புக்கிழுத்த விஜய்..!!