×
 

#BREAKING பாட்டிலுக்கு 10 ரூபாய்.. பாட்டு பாடி செந்தில் பாலாஜியை வம்புக்கிழுத்த விஜய்..!!

பாட்டிலுக்கு 10 ரூபாய்.. பாட்டிலுக்கு 10 ரூபாய் என கரூரில் பாட்டு பாடி செந்தில் பாலாஜியை வம்புக்கிழுத்தார் தவெக தலைவர் விஜய்.

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவரும், பிரபல நடிகருமான தளபதி விஜய், இன்று கரூர் வேலுசாமிபுரத்தில், தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மணல் கொள்ளை தான் கரூரின் தீராத தலைவலி என்றும் மணல் கொள்ளை அடிப்பவர்களிடம் இருந்து காவிரி தாய்க்கும், தமிழக மக்களுக்கும் விடுதலை வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய ஏரியான பஞ்சபட்டி ஏரி தூர்வாரப்படாமல் இருக்கிறது, தவெக ஆட்சிக்கு வரும்போது பஞ்சபட்டி ஏரி உயிர் பெறும் என்றும் கூறினார்.

மேலும் முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி திமுக எம்எல்ஏவமான செந்தில் பாலாஜி குறித்து விமர்சிக்க தொடங்கிய விஜய், பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று பாட்டு பாடி கிண்டல் அடித்தார். கரூரில் சமீபத்தில் நடந்தது என்ன? 30 பேரு விழா, சாரி முப்பெரும் விழா என நக்கலடித்து, செந்தில் பாலாஜியை முதலமைச்சர் விமர்சித்த வீடியோவை ஃபேக்ட் செக் நண்பர்கள் பார்க்க வேண்டும் என்றும் ஊழலால் கிடைக்கும் பணத்தை திமுக குடும்பத்திற்கு 24x7 டெலிவரி செய்யும் ஏடிஎம் மிஷின் ஆக உள்ளார் செந்தில் பாலாஜி என்றும் கடுமையாக சாடினார். அதுமட்டுமின்றி கரூரில் இருக்கும் முக்கியமான பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் செந்தில் பாலாஜி தான் என்ற அவர், அமைச்சராக இல்லாத போதும் செந்தில் பாலாஜி அமைச்சர் மாதிரி தான் என கடுமையாக விமர்சித்தார். 

இதையும் படிங்க: #BREAKING இதுதான் உங்கள் டக்கா? தவெக கோட்டையாக மாறிய கரூரில் ஆளும் கட்சியை கிண்டலடித்த விஜய்..!!

தொடர்ந்து பேசிய விஜய், கரூர் மாவட்டத்தில் போலீஸ்காரர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று தொண்டர்களை நோக்கி கேள்வி எழுப்பியதோடு, காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்றும் போலீஸ் சார், மக்கள் தான் எஜமானர்கள், அவர்களுக்கு தான் நீங்கள் பயப்பட வேண்டும் என காவல்துறைக்கு விஜய் அறிவுரை கூறினார். 

இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி மாறும், காட்சிகள் மாறும், நம்பிக்கையோடு காத்திருங்கள் - வெற்றி நிச்சயம் என்றும் எல்லாருக்கும் சுதந்திரமான, பாதுகாப்பான மக்களாட்சி அமையும் என்றும் கூறி தனது உரையை முடித்தார் விஜய்.

இதையும் படிங்க: #BREAKING வரும் தேர்தல்ல ஒரு கை பார்த்துடலாம்.. நாமக்கல் மண்ணில் அடித்துப்பேசிய விஜய்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share