தவெகவிற்கு தொடரும் நெருக்கடி... காலையிலேயே வெளியான ஷாக்கிங் நியூஸ்... விஜய் எடுத்த அதிரடி முடிவு...!
முறையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து அவசர வழக்காக விசாரிக்க கூறி நீதிமன்றத்தை நாடலமா என்று ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார் விஜய் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் குறிப்பிட்ட இடத்தில் பரப்புரை செய்ய அனுமதி மறைக்கப்பட்ட நிலையில் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வாரம்தோறும் சனிக்கிழமைகளில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டு வரக்கூடிய நிலையில், நாளைய தினம் கரூர் மற்றும் நாமக்கலில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுருக்கிறார். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அனுமதி கூறப்பட்ட நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலாக வேறு இடம் குறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய ஒரு சூழலில் தற்பொழுது அது தொடர்பாக விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் நாமக்கல்லில் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடத்திற்கு அனுமதி கிடைத்த நிலையில், கரூரில் பிரச்சாரம் செய்தது என்பதில் வந்து சிக்கல் நீடித்து வருகிறது.
ஏனென்றால் ஏற்கனவே இரண்டு இடங்களை தவெகவினர் பரிந்துரைத்தனர். ஆனால் அந்த இடங்களில் பரப்புரை செய்ய காவல்துறை அனுமதி மறுத்தது. தற்போது பிரச்சாரத்திற்கு த 24 மணி நேரம் தான் இருக்கக்கூடிய இந்த சூழலில் உடனடியாக நீதிமன்றத்தை நாடலாமா? அவசர வழக்காக எடுத்து விசாரிக்க கூறலாமா? என்று தவெக நிர்வாகிகளுடன் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: வார்த்தையை அளந்து பேசுங்க சாட்டை... தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்த தவெக நிர்வாகிகள்...!
பிரச்சாரத்திற்கு குறைவான நேரமே இருப்பதால், காவல்துறைக்கு அனுமதி வழங்கக்கோரி உடனடியாக உத்தரவிட வேண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தவெக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட முறையான பாதுகாப்பு காவல்துறை சார்பில் வழங்கப்படவில்லை அது குறித்தும் மனு அளிக்க வந்து திட்டமிட்டுருக்கிறார்கள் எனக்கூறப்படுகிறது. குறிப்பாக முறையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து அவசர வழக்காக விசாரிக்க கூறி நீதிமன்றத்தை நாடலமா என்று ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார் விஜய் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழக அரசியல்வாதிகளில் விஜய் தான் ஃபஸ்ட்... FOLLOWERS எத்தனை கோடி தெரியுமா?