தொடரும் மர்மம்.. ஆட்டிசம் பாதிப்பு இளைஞர் உடல் தோண்டியெடுப்பு.. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை..!
பொள்ளாச்சியில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த ஆட்டிசம் பாதித்த இளைஞரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் உள்ள மனநல காப்பகத்தில் கடந்த 15ஆம் தேதி முதல் மனநலம் பாதித்த இளைஞர் வருண் காணாமல் போனதாக கூறப்படுகிறது. சிறுவன் காணாமல் போனதில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்த நிலையில் சிறுவனை தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பாக மனநல காப்பகத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் கிரிராம் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். பின்னர், மேற்பார்வையாளர் நிதீஷ் மற்றும் பணிப்பெண் ரங்கநாயகி போலீசார் கைது செய்தனர்
இதையும் படிங்க: காமுகன் திருநாவுக்கரசுக்கு மட்டும் ஏன் ஐந்து ஆயுள் தண்டனை - அரசு வழக்கறிஞர் சொன்ன பகீர் காரணம்...!
இதனையடுத்து கிரிராம், ஜேசிபி ஓட்டுநர் உள்ளிட்டோர் அளித்த தகவலின் பெயரில் தோட்டத்தில் உடல் புதைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. அந்தத் தோட்டத்திற்கு மூன்று குழிகள் மரம் நடுவதற்கு தோண்ட வேண்டும் என்று அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பன்னிரண்டாம் தேதி காலை சிறுவனின் உடல் அங்கு கொண்டு செல்லப்பட்டு அந்த குழியில் புதைக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் கிரிராமை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று சிறுவனின் உடலை போலீசார் தோண்டி எடுத்துள்ளனர். அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, தோட்ட உரிமையாளர் கவிதா என்பவரை மகாலிங்கம் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெருங்கொடுமைக்கு கிடைத்த நீதி.. பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு..!