#BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் கூடுதல் நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரண தொகை 85 லட்சத்திற்கும் கூடுதலாக ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அவரு எடுபுடி கோழைச்சாமி.. கோடநாடுன்னு சொன்னாலே தொடை நடுங்குதே! பந்தாடிய அமைச்சர்..!
பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தது மட்டுமல்லாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு தந்ததால் தீர்ப்பு கிடைத்திருப்பதாக கூறியுள்ளார். அத்தகைய நியாயத்திற்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது என்று முதலமைச்சர் கூறினார்.
இதையும் படிங்க: வலுவான ஆதாரம் இருந்ததால் தான் நீதி கிடைத்தது..! திமுக, அதிமுகவை வெளுத்து வாங்கிய திருமா..!