×
 

“தவழ்ந்து முதல்வரான தவழ்புதல்வனே..” - பொள்ளாச்சியில் கால் வைத்ததுமே எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

 எடப்பாடி பழனிசாமியை எதிர்மறையாக விமர்சித்து நகர் முழுவதும் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர்களால் பொள்ளாச்சியில் பரபரப்பு

தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணமாக எடப்பாடி பழனிச்சாமி பொள்ளாச்சி வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இதில் ஒரு பகுதியாக இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவருக்கு நேற்று இரவு பொள்ளாச்சி கோதவாடி பிரிவு மற்றும் ஆச்சிப்பட்டி அருகே கட்சித் தொண்டர்களால் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அலங்கார வளைவுகள் வைத்து, அதிமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தும், கட்சி குறித்தும் நூற்றுக்கு மேற்பட்ட போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் பொள்ளாச்சி நகர் பகுதி முழுவதும் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்மறையாக விமர்சித்து பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சசிகலா, ஓபிஎஸ், டிடிவியை அதிமுகவுக்குள் கொண்டு வர துடிதுடியாய் செங்கோட்டையன்... பின்னணியில் மறைந்திருக்கும் பகீர் காரணம்...!

அதில்  அதிமுக ஆட்சியின் காலத்தில் நடைபெற்ற செயல்பாடுகள் குறித்து அவதூறு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் விமர்சிக்கப்பட்டுள்ளது. இன்று பொள்ளாச்சியில்  எடப்பாடி பழனிச்சாமி தொடர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நிலையில், நகர் முழுவதும் ஒட்டப்பட்டு இருக்கும் எதிர்மறை போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் படித்து வளர்ந்த மேதையே வருக, ஏற்றிவிட்ட ஏணியை எல்லாம் உருத்தெரியாமல் ஆக்கிய உத்தமரே வருக, பத்துத் தோல்வி பழனிசாமியே வருக, கொடநாடு கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியே வருக, பங்காளிகளைக் கொன்று பாவம் பெற்றவரே வருக, திலிப்பித் திலிப்பி பொய் பேசத் தெரிந்தவரே வருக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்ததை டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்ட முன்னாள் முதல்வரே வருக... போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சும்மா உருட்டக்கூடாது! முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி இபிஎஸ் சரமாரி கேள்வி...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share