2.22 கோடி ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு... முக்கிய தகவல்...!
தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விபரங்களை பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது ஒரு நீண்டகால வழக்கமாகும். இத்திட்டம் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கலை மக்கள் சிறப்பாகக் கொண்டாட உதவும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இத்தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.கடந்த ஆண்டுகளில் இத்தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற அடிப்படைப் பொருட்கள் இடம்பெற்றன. சில ஆண்டுகளில் ரூ.1000 முதல் ரூ.2500 வரை ரொக்கமும் சேர்க்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணங்களால் சில சமயங்களில் ரொக்க உதவி நீக்கப்பட்டது. இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டமும் இதனுடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
தற்போது, 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தலா 22,291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... அரசிதழில் வெளியிட தமிழக அரசுக்கு கெடு... ஹைகோர்ட் ஆனை..!
மேலும், 1.77 கோடி வேட்டி, 1.77 கோடி சேலைகள் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் என செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பரிசில் வழங்கப்படும் ரொக்க பணம் மற்றும் கரும்பு கொள்முதல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2026 ஜல்லிக்கட்டு... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... தமிழக அரசு முக்கிய அறிவிப்பு...!