×
 

பொன்முடிக்கு மீண்டும் சம்மன்! மே 12-ல் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

பெண்களை இழிவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், மே 12-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் இன்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்களைக் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி வரும் மே 12-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனச் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் இன்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொன்முடி, இந்து மதச் சின்னங்கள் மற்றும் பெண்கள் குறித்துக் கொச்சையான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்ளிட்டோர் அவர் மீது தனிநபர் புகார் அளித்தனர்.

எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று நீதிபதி சவுந்திர பாண்டியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சம்மன் அனுப்பப்பட்டிருந்தும் பொன்முடி இன்று நேரில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்தச் சம்மனை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இன்று ஒருநாள் மட்டும் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரினார். இருப்பினும், இந்தக் கோரிக்கையை ஏற்காத நீதிபதி, வரும் மே 12, 2026 அன்று பொன்முடி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, மீண்டும் சம்மன் அனுப்ப ஆணையிட்டார்.

இதையும் படிங்க: யாருமின்றி தனியாக மும்பை சென்ற விஜய்! ரகசிய திட்டமா? குடும்ப விழாவா? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி, தற்போது நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. அவருக்குப் பதிலாகத் திருக்கோவிலூர் தொகுதியில் அவரது மகன் கௌதம சிகாமணி வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாளை சென்னை வருகிறார் பியூஸ் கோயல்..!! தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share