×
 

சிறை வாசலில் போக்சோ கைதி தப்பியோட்டம்... விடிய, விடிய 200 போலீசார் தீவிர தேடுதல் வேட்டை... பரபரப்பு பின்னணி...!

சிறை வாசலில் போலீசாரின் பிடியிலிருந்து தப்பிய வடமாநிலத்தைச் சேர்ந்த போக்சோ குற்றவாளி, விடிய விடிய 200க்கும் மேற்பட்ட போலீசார் தேடியும் கிடைக்காததால் செய்வதறியாமல் தவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 15 வயது சிறுமியை பாலியல் தாக்குதல் செய்து மூன்று மாதம் கர்ப்பமாக்கிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரை போக்சோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர் அழைத்துச் சென்ற போது போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓட்டம், சிறை வாசலில் உள்ள உணவகத்தில் இரவு உணவு உண்ட வட மாநில இளைஞர் கை கழுவும் பொழுது தப்பி ஓடியதால் பரபரப்பு, தப்பி ஓடிய வட மாநில இளைஞரை இரவோடு இரவாக தேடுதல் பணியில் 200 போலீசார் தீவிரம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு ஹாலோ பிளாக் நிறுவனத்தில் 15 வயது சிறுமியும் ஒடிசா மாநிலம் ராயகாடா மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரா கமாங்கா என்ற 23 வயது இளைஞரும் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த சிறுமிக்கும் மகேந்திரா கமாங்காவுக்கும் பழக்கம் ஏற்பட்டு சிறுமியை மகேந்திரா கமாங்கா பாலியல் தாக்குதல் செய்தலில் சிறுமி மூன்று மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது அந்த சிறுமி புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நிலையில் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுமியை கர்பமாக்கிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரா கமாங்காவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்க ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மனமல்லி தலைமையிலான இரண்டு பெண் காவலர்கள் ஒரு ஆண் காவலர் ஆகியோர் காவல்துறையின் ஜீப்பில் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: நாளை தவெக ஆலோசனை கூட்டம்... தலைமைக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... முழு விவரம்...!

அப்போது புதுக்கோட்டை மாவட்ட சிறை எதிரே உள்ள உணவகத்தில் போலீசார் போக்சோவில் கைதான வடமாநில இளைஞர் மகேந்திரா கமாங்காவை இரவு உணவு உண்ண வைத்துள்ளனர். அப்போது இரவு உணவை உண்டு முடித்த மகேந்திரா கமாங்கா உணவக வாசலில் கை கழுவும் போது போலீசார் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களது பிடியிலிருந்து தப்பி ஓடி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர் மகேந்திரா கமாங்காவை துரத்திப் பிடிக்க முயற்சி செய்தும் முடியாத நிலையில், இது குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் 40 பட்டாலியன் போலீஸ் மற்றும் புதுக்கோட்டை மாநகர பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல்துறையினர் என மொத்தம் 200 போலீசாரை வரவழைத்து இரவோடு இரவாக தப்பி சென்ற வட மாநில இளைஞரான மகேந்திரா கமாங்காவை தேடுதல் பணியை முடுக்கி விட்டுள்ளார். 

மாவட்ட எஸ்பி உத்தரவின் பெயரில் 200 போலீசாரும் புதுக்கோட்டை மாவட்ட சிறையை சுற்றியுள்ள பகுதிகளிலும் லாரிகள் பேருந்துகள் சந்தைப்பேட்டை ரயில்வே நிலையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் டார்ச் லைட் செல்போனில் உள்ள லைட் உதவியுடன் இரவோடு இரவாக தேடி வருகின்றனர். 

அதோடு மட்டுமின்றி தப்பிச்சென்ற வட மாநில இளைஞர் மகேந்திரா கமாங்காவின் புகைப்படத்தை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர் சிறையில் அடைக்க அழைத்துச் செல்லும் பொழுது செல்லும் வழியில் தப்பி சென்றதாக கூறியும் அவர் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி செல்போன் எண்ணையும் வெளியிட்டு பொதுமக்கள் உதவியும் காவல்துறையினர் நாடியுள்ளனர். 

மேலும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க அழைத்துச் சென்ற வடமாநில இளைஞர் சிறை வாசலிலேயே தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில் வடமாநில இளைஞரை சிறையில் அடைக்க அழைத்து வந்த ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு காவல்துறையினர் வட மாநில இளைஞரை தப்பவிட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்படுவோமா என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும் வட மாநில இளைஞர் தப்பிச்சென்ற சம்பவம் புதுக்கோட்டை மாநகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று முழுவதும்  தேடியும் வட மாநில இளைஞர் கிடைக்கவில்லை என்றால் அவரின் சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு தான் போலீசார் செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதாக தகவல்.

இதையும் படிங்க: மத்திய அரசின் திட்டங்கள் பெயரில் கஜானா நிரப்பிய பாஜக... காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share